
சேலம் அய்யனார் ஶ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில், அவதார் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ள “லில்லி புட்” படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் “லில்லி புட்” படத்தின் கதை குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான சேலம் அய்யனார் பேசுகையில், லில்லி புட் என்பது ஒருவகையான மிருகம். அதை வீட்டில் வைத்து வணங்கினால் நினைத்ததை சாதிக்கும் வல்லமை வரும். இந்தியாவில் மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவர் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. திரையுலக முன்னனி நடிகர் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தை அவதார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் “என்டர் தி டிராகன்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் வெற்றி நாயகனாகவும், சேலம் அய்யனார் அரசியல்வாதியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்திபன். ஜெ இயக்கி வருகிறார்.