0 1 min 3 mths

ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பன், பால சரவணன், கீதா கைலாசம், ஶ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தருமன்”.

கதைப்படி.. சி.ஆர்.பி.எப் ( Central Reserve Police Force ) அதிகாரியாக இருக்கும் கிஷன்தாஸ், ஒரு ஆபரேஷனில் தன் நண்பரை சுட்டுக் கொன்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அந்த விசாரணைக்காக சென்னைக்கு வந்து நண்பரின் வீட்டில் தங்குகிறார். அந்த சமயத்தில் ஸ்மிருதி வெங்கடை பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, இருவர் வீட்டிலும் பேசி நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்கப்படுகிறது.

அந்த சமயத்தில் ஸ்மிருதி வெங்கட் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் ராஜ் அய்யப்பன் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஸ்மிருதி ராஜ் அய்யப்பனை கொலை செய்துவிடுகிறார். அதே நேரத்தில் கிஷன்தாஸ் ஸ்மிருதி வீட்டிற்குள் வருகிறார். இருவரும் சேர்ந்து அந்த கொலையை மறைக்க முயற்சிக்கின்றனர். சிறுது நேரத்தில் ராஜ் அய்யப்பனின் அம்மாவும் மகனைத் தேடி ஸ்மிருதி வீட்டிற்கு வருகிறார்.

ராஜ் அய்யப்பனை எதற்காக ஸ்மிருதி கொலை செய்தார், இருவரும் கொலையை மறைத்தார்களா ? மாட்டிக்கொண்டார்களா ? என்பது மீதிக்கதை..

சஸ்பென்ஸ், த்ரில்லர் கதை விருவிப்பாக இல்லாமல், நிதானமாக நகர்கிறது. கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட் இருவருக்குமான காதல் காட்சிகளை அதிரித்திருக்கலாம். திரைக்கதையில் இயக்குநர் கொஞ்சம் கவணம் செலுத்தியிருக்கலாம். பால சரவணன், கீதா கைலாசம் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *