
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இரு தினங்களுக்கு முன் மடத்துக்குளம் அடுத்துள்ள கே.டி.எல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர். பின்னர்
காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

அதனைத்தொடர்ந்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– சாதிக் பாட்சா