0 1 min 2 mths

வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை பொழுதுபோக்கு துறையில் அதிகம் வெளிப்படுகிறது. பிராந்திய மற்றும் மொழித் தடைகள் போன்றவற்றைக் கடந்து திறமை மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது.

பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவரது சினிமா வருகைக்கு பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிகையாக அறிமுகமாவது பற்றி மோனிஷா சென் பகிர்ந்திருப்பதாவது, இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ! பிரபாஸ், என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகள் என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப் போலவே நானும் பார்த்து ரசித்து வருகிறேன். சினிமாவில் அவர்களின் அற்புதமான நடிப்பு, அர்ப்பணிப்பு, கமர்ஷியல் விஷயங்கள் என இவை அனைத்தும் தென்னிந்திய சினிமாவை பெருமை கொள்ள செய்கிறது.

இந்த சிறப்புகள் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் நானும் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம் என தன்னம்பிக்கையுடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *