0 1 min 4 mths

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் முன்னெடுப்பில் அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் திருப்போரூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் திருமதி. ஸ்வேதா  விஸ்வநாத், சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், SDAT இன் முன்னாள் பொது மேலாளர் ரெஜின, திருப்போரூர் காவல் ஆய்வாளர் சரவணன் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் M சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் மூன்று வெவ்வேறு போட்டிப் பிரிவுகள் உள்ளன:

1. மகளிர் எலைட் 36 kms
2. இளம்பெண்கள் ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) 30 kms
3. துணை ஜூனியர் & இளம்பெண்கள் (16 வயதுக்குட்பட்டோர்) 18 kms

இந்த பிராந்திய போட்டியில் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திறமையான பெண் சைக்கிள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் உள்ள பெண் சைக்கிள்  வீராங்கனைகளின் திறமைகளையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் தளமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு போட்டி ரீதியிலான சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பையும் ஊக்குவித்து, பங்கேற்பாளர்களிடையே விளையாட்டு உணர்வையும், நட்புணர்வையும் வளர்க்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டிற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். பல்வேறு முன்முயற்சிகள் மூலமாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Sports development authority of Tamilnadu ஆதரவுடனும், தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டை குறிப்பிடத்தக்க அளவில் ஊக்குவித்துள்ளது. இந்த முயற்சிகள் சைக்கிளிங் மூலம் விளையாட்டுத் திறமையை வளர்ப்பதிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதிலும் தமிழக அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *