தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
பின்னர் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில், பட்டீஸ்வரம் காவல்துறையினர், சேஷம்பாடி பகுதிக்குச் சென்றபோது, சேஷம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செட்டிபாளையத்தைச் சேர்ந்த சாமி அய்யா, தேவா, நாச்சியார் பாளையம் கூகூரைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர், டிப்பர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், அனைவரையும் கைது செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
– மாலிக்
மாவட்ட செய்தியாளர்.