0 1 min 4 mths

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கவிதா. இவர் சென்னை பத்திரப்பதிவுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உதவியாளராகவும், சார் பதிவாளர் (பொறுப்பு) பணியில் பணியாற்றி உள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளர் பணிக்கு வந்தலிருந்தே பல்வேறு முறைகேடான பத்திர பதிவுகளை செய்து வந்ததுடன், 15.12.2023 அன்று காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட ஏரந்தாங்கல் கிராமத்திற்கு உள்ளடங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுயுள்ள சரஸ்வதி என்பவரின் பெயரில் உள்ள (D.C land) இடமானது சர்வே எண் 335/1B3. 8. சென்ட் இடத்தை காட்பாடி சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

பதிவு எண் : 11677/2023. இந்த 8 சென்ட் இடத்திற்கு பத்திர பதிவு செய்ததுடன். (D.C land) பத்திரப்பதிவு செய்தபவர்களிடமிருந்து முழு ஆவணம் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் (D.C land) இடமானது வைத்திருப்பவர்கள் தனது ரத்த சொந்த பந்தங்களுக்கு மட்டும் பெயர் மாற்றம் பதிவு செய்து கொள்ளலாம். மாற்றாக வேறு யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது. அவ்வாறு அந்த இடத்தை வேறு யாராவது வாங்கினாலும் அது செல்லாது. இந்த நிலையில் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்தபோது கவிதா என்பவர் முறைகேடாக பத்திர பதிவு செய்ததாக கவிதா, வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு மூன்று மாதம் கழித்து கே.வி. குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளர் பதவிக்கு, மீண்டும் பணியிட மாற்றம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதா. இவர் ஒரு புரோக்கரிடம் பத்திரப் பதிவு செய்ய லஞ்சமாக வாங்குவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சார்பதிவாளர் கவிதா லஞ்சமாக கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகையில், ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம். 75 இதில் உள்ளது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது பதிவாகியுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதா முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கவிதாவை தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கே.வி. குப்பம் சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதாவிற்கு சென்னையில் மட்டுமே கோடி கணக்கில் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், மேலும் தனது சொந்த ஊரான குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிலங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில், பல கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கவிதாவின் ரத்த ரத்த சொந்தங்களான, மகள்கள் மற்றும் மருமகன், சம்மந்தி ஆகிய உறவினர்கள் பெயருக்கு போன் பே, கூகுள் பே போன்ற ஆப் மூலம் லஞ்சமாக பெற்ற பணமானது பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதாகவும் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *