தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் வெங்கடேஷ். நீண்ட காலமாக தெலுங்கு ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பரான வசூலையும் கொடுத்துள்ளது. இவரது 75 வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் வெங்கடேஷின் 75வது படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் இரண்டு அட்டகாசமான வில்லன் கதாப்பாத்திரங்களாம், அதற்காக இந்தியிலிருந்து நவாசுதீன் சித்திக்கையும், தமிழிலிருந்து சமுத்திரக்கனியையும் அனுகியிருக்கிறார்கள்.
நவாசுதீன் சித்திக் உடனே ஓகே சொல்லிவிட, சமுத்திரக்கனி தேதிகூட ஒதுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறாராம். அதனால் சமுத்திரக்கனி கதாப்பாத்திரத்திற்கு நடிகர் பசுபதியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
நவாசுதீன் சித்திக்கைவிட வலுவான கதாப்பாத்திரமாம் பசுபதிக்கு, பசுபதி ஏற்கனவே வில்லன், குணச்சித்திரம் என பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமுத்திரக்கனியின் நடிப்பை விரும்பிய வெங்கடேஷின் விருப்பத்தை பசுபதி பூர்த்தி செய்வார் என்கிறாராம் படத்தின் இயக்குனர்.