0 2 yrs

சசிக்குமார் இயக்கத்தில், சண்முகபாண்டியன் நடிப்பில் கைரேகை சட்டத்தின் வரலாற்றைச் சொல்லும் “குற்றப் பரம்பரை” கதையை ஹார்ட் ஸ்டார் ஓடிடி தயாரிக்க, படக்குழு படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகி வருகிறார்கள்.

சினிமா, அரசியல் என இரண்டிலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இவரது இரண்டு மகன்களில் மூத்த மகன் பிரபாகரன் அரசியலிலும், இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவிலும் கவணம் செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் சண்முகபாண்டியன் குற்றப் பரம்பரை கதையில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பேசி வைத்திருந்தார்கள். அவரும் வருடக் கணக்கில் தாடி, மீசை வளர்த்து படப்பிடிப்புக்கு கிளம்ப தயாரானார்.

இந்த விஷயம் இயக்குனர் சீமானுக்கு தெரிய வந்ததும், தமிழ் பரம்பரையின் கதையில் அவருக்கு என்ன வேலை ? என இயக்குனர் சசிக்குமாரிடம் கேட்டிருக்கிறார். பரம்பரை கதையில் கேப்டன் பரம்பரையில் வந்த சண்முகபாண்டியன் நிச்சயம் சாதிப்பார் என அவருக்கு விளக்கம் சொல்லி போராடி வருகிறதாம் படக்குழு.

வருடக் கணக்கில் தாடி, மீசையுடன் காத்திருக்கும் சண்முக பாண்டியன், இந்த வரலாற்று கதையில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்கிற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *