
தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோவை மாவட்டம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவபடத்திற்கு, தமிழ்நாடு பட்டியலின/பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் செல்வக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் ஆணையத்தின் உறுப்பினர் எம். பொன்தோஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், வேளாண் துறை, நகராட்சி நிர்வாகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறை, தொலைதொடர்பு மற்றும் பொது நூலகத்துறையினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
– ரமேஷ்