
தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆரோக்கியசாமி ஆலோசனைகளை வழங்கி வழங்கியிருக்கிறார்.

இதை கேட்ட விஜய் 2026 ஆம் ஆண்டு தனியாக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக உள்ள 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என ஆட்களை தேர்வு செய்யுங்கள். 234 தொகுதிகளிலும் கட்சிக்கு செலவு செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என சொல்லியிருக்கிறார் விஜய். அடுத்த கட்டங்களை யோசித்து வருகிறதாம் ஆரோக்கியசாமி தரப்பினர்.