
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்ல கட்டிடத்தில் இல.முரளி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கிணங்க பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டுவரும் மாநில மையத்தினை மீண்டும் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் துணைத் தலைவர் கே ஆர் ராஜேந்திரன், மாநில தலைவர் கோ. சுசீந்திரன், மாநில செயலாளர் திருமதி சுகன்யா, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் வடிவேல், வருவாய்த்துறை சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
– ரமேஷ்
கோவை செய்தியாளர்