ஏலியன்ஸ் -2042 என்கிற படம் வருகிற மே-26 அன்று உலகம் முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆறு மொழிகளில் வெளியாகிறது. 777 பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
கதைப்படி… தாய் பூமியில் காணப்படும் நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில்,
ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்தின் மீதும் ஒரு பெரிய தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுபடுகிறார்கள். மற்ற அனைத்து இராணுவப் படைகளும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, விட்டுச் சென்ற சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது. தப்பிப்பிழைத்தவர்களில் செங் லிங் என்ற ஆர்வமுள்ள இளைஞர் ஒருவர் காவோ ரெனுடன் காதலில் விழுகிறார். தனது காதலியின் மீதான காதலைத் தொடரும்போது, செங்கிற்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும்படியான கட்டாயம் ஏற்படுகிறது. வேற்று கிரக வாசிகளால் மனித இனத்தின் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஏற்க நேர்கிறது.
கர்டெய்ன் ரோசர் ( CURTAIN RAISER ) அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ALIENS-1986 என்ற படம் சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்றாக இப்போதுவரை இருக்கிறது. இந்த கதையில் பல தொடர்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஃபாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றும் ஜேம்ஸ் கேமரூனின் ALIENS-1986 இன்றும் சினிமா விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் இன்றும் மதிக்கப்படுகிறது.
வேற்று கிரக வாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்தப்படம் ஏலியன்ஸ் -2042 ( ALIENS-2042 ) மே-26 உலகம் முழுவதும் வெளியாகிறது.