
திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் அரசியல் கட்சினருக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை முழுமையாக மீண்டும் படியுங்கள். அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, ஏதாவது ஒரு விஷயத்தை இதை எதிர்த்து, இதற்காக என எந்த ஒரு அஜெண்டாவும் குறிப்பிடப்படவில்லை. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசுக்கு எதிராக போராட தயாராக வேண்டிய சூழலை உருவாக்குவதற்காக கூட்டத்தை கூட்டுகிறார்கள்.
1962, 1967 அந்தக் காலகட்டங்களில் ஆட்சிக்கு வருவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தினார்களோ கடைப்பிடித்தார்களோ அதே தந்திரங்களை மீண்டும் கொண்டுவரக் கூடிய வகையில் எட்டு கோடி தமிழர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திணிப்பதற்காக, கிளர்ச்சியை ஏற்படுத்தவே அவர்கள் நடத்தக்கூடிய கூட்டமாகத்தான் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை பாரதி ஜனதா பார்க்கிறது என்றார்.