டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 […]
சினிமாதொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார். ஒரு […]
விமர்சனம்வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே […]
சினிமாதமிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் […]
சினிமாதமிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தை M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி ‘கூடு’ என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் […]
சினிமாபடைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ‘ ஹனு-மேன்’ படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும்.
இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் புதிய அனுபவத்தை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் டீசரில் சில காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் வி எஃப் எக்ஸ் ஹாலிவுட் தரங்களுக்கு இணையாக இருந்தது. மேலும் ஹனுமான் சாலிசா என்ற பாடலுக்கும் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில், ” ஹனு- மேன் படத்தின் டீசருக்கு நீங்கள் வழங்கிய அளப்பரிய வரவேற்பு எங்களது இதயத்தை தொட்டது. மேலும் முழுமையான சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது. நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம். பகவான் ஹனுமானுக்கு சரியான ஒரு பாடலாக இருக்கும். அது நேசத்திற்குரியது. நீங்கள் பெரிய திரைகளில் அனுமானை அனுபவிக்க புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம் ஜெய் ஸ்ரீ ராம்” என குறிப்பிட்டனர்.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ‘ஹனு-மேன்’ பான் வேர்ல்ட் வெளியீடாக இருக்கும்.
‘ஹனு-மேன்’ அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனையான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் ஹனுமானின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தத் திரைப்படத்தின் தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில்.. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஓம் ராவத் இயக்கிய ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது. இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதி […]
சினிமாஉலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில்.. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஓம் ராவத் இயக்கிய ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.
இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய முன்னோட்ட வெளியீட்டு விழா மே மாதம் ஒன்பதாம் தேதியன்று நடைபெறுகிறது. இதனை பான் இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபாஸ் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டு படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான இந்த பிரம்மாண்டமான படைப்பு இதற்கும் முன் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தின் புதிய தகவல்களுடன் வெளியிடப்படும் பிரத்யேக போஸ்டர் மற்றும் காணொளிகள், ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு முன்னோட்ட வெளியிட்டிற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய அளவில் வெளியிடப்படவிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மியான்மர், இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட உலக நாடுகளிலும் இந்த பிரம்மாண்டமான முன்னோட்டம் வெளியாகிறது. இந்த முன்னோட்டம் உலகளாவிய பார்வையாளர்களை அதிரடியான உலகிற்கு அழைத்துச் செல்வது உறுதி.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யு வி கிரியேசன்ஸின் பிரமோத் – வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகிறது.
திமுகவுக்காக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமாக இருக்கத் தயார் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை. சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு இன்னும் முழுமையாக அந்தப் பதவிக்கான அங்கீகாரம் இன்னும் […]
அரசியல் இந்தியாதிமுகவுக்காக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமாக இருக்கத் தயார் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை. சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு இன்னும் முழுமையாக அந்தப் பதவிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என கருதுகிறார்கள் அதிமுகவினர்.
ஆகையால் பழனிச்சாமி தரப்பில் தம்பிதுரை அமித்ஷாவை சந்தித்து நாங்கள் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கடசிக்கு முழுமையான ஆதரவு தர தயாராக இருக்கிறோம். பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வாகி இருக்கிறார். அதற்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம். அவரை அங்கீகாரம் செய்வதற்கு உதவுங்கள் என சமாதானம் பேசியிருக்கிறார் தம்பிதுரை.
இதற்கு அமித்ஷா தம்பிதுரையைப் பார்த்து உங்களுக்கு நமது கூட்டணியை ஜெயிக்க வைக்கவோ, பாரதிய ஜனதா கட்சியை ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் சுத்தமாக இல்லை என வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை 2026ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து வேலை செய்கிறீர்கள். 2024ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையில் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் எங்களோடு ஒத்துழைக்க தயாராகவும் இல்லை என பேசியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. நீங்களாகவே சிக்கலை உருவாக்கி பலவீனப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.
தற்போதைய சூழலில் நாங்கள் பழனிச்சாமியையோ, பன்னீர் செல்வத்தையோ ஆதரிக்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை அதிமுக பலமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கூட்டணி ஜெயிக்கும். இதுதான் இப்போதைக்கு எங்களின் முடிவு என கறாராக பேசி அனுப்பி இருக்கிறார் அமித்ஷா.
அமித்ஷா தம்பிதுரையிடம் பேசி அனுப்பியதை அறிந்த பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். டெல்லியில் அமித்ஷா, நட்டா தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றி தம்பிதுரை பழனிச்சாமியிடம் கூறியிருக்கிறார். கட்சியை பிளவுபடுத்தி பொதுச்செயலாளர் என தனித்து உங்களை அங்கீகரிக்க டெல்லி பாஜக விரும்பவில்லை என கூறியதும். இது எதிர்பார்த்ததுதான் என்றிருக்கிறார் பழனிச்சாமி. பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நான் நேரில் சந்தித்து சரிசெய்து கொள்கிறேன் என அசால்டாக பேசியிருக்கிறார்.
அதிமுகவிலிருந்து பன்னீர் செல்வத்தை ஒதுக்கியதே பாரதிய ஜனதா கட்சியை ஓரங்கட்டுவதற்காகத் தான். அதிமுகவில் பன்னீர் இருப்பது பாஜக இருப்பதற்கு சமம். பன்னீரை ஓரங்கட்டினால் பாஜகவை நாம் ஓரங்கட்டியது போல்தான் என நினைத்துத்தான் பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டினார்கள் என பிரதமருக்காக தமிழகத்தில் பணிபுரியும் உளவுப்பிரிவினர் மோடிக்கு அறிக்கை அனுப்பியிருந்தார்களாம். இந்த அறிக்கையின்படிதான் தம்பிதுரையிடம் அமித்ஷா பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது அவரைச் சந்தித்து பேசுவதற்காக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 10 நிமிடங்கள் அனுமதி வாங்கியிருக்கிறார் தம்பிதுரை. அதேபோல் பன்னீர்செல்வமும் பிரதமரைச் சந்தித்து பேசுவதற்காக அவருக்காக பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவருக்கும் 10 நிமிடங்கள் அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் பிரதமர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பழனிச்சாமியுடன் கை குலுக்கியதும், அருகில் இருந்த பன்னீர் செல்வத்திற்கும் கை குலுக்கியிருக்கிறார். பன்னீர் வழக்கம்போல் குனிய டோன்ட் ஒரி என சொன்னாராம். இதனைப் பார்த்த நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி இருவரும் அப்செட் ஆகியிருக்கிறார்கள்.
அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமாக நடந்து கொண்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களை விட அதிகமான நேரம் ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார். மோடியைப் பொறுத்தவரை ஸ்டாலினை எதிரியாகப் பார்க்காமல், எதிர்அணியின் வலுவான தலைவராக பார்த்திருக்கிறார். வருகிற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஸ்டாலின் உதவியுடன் ஆட்சி அமைக்கலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் என்கிறார்கள். 2024 தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியலில் ஸ்டாலின் முக்கிய பங்கு வகிப்பார் எனவும் மோடி கருதுவதாக கூறுகிறார்கள். அதன்பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது சந்திப்பதற்காக காத்திருந்த பன்னீர் செல்வத்தையும் பழனிச்சாமியையும் பிரதமர் சந்திக்காமல் கிளம்பி சென்றுவிட்டார். அதன்பிறகு பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்ட பாஜக தரப்பினர் நீங்கள் மக்களைச் சந்தித்து கூட்டத்தைக் காட்டுங்கள். உங்கள் செல்வாக்கை நீங்கள் நிரூபித்தால் பாஜக ஒருபோதும் உங்களை கைவிடாது என தைரியம் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் திருச்சியில் மாநாடு நடத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம்.
– சூரிகா
தமிழ்த் திரையுலகில் திரைப்பட தொழிலாளர்களின் பாதுகாப்பான அமைப்பாக சொல்லப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட 24 சங்கங்களில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் சங்கக் கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நீதிமன்ற உத்தரவுப்படி பூட்டி சீல் […]
சினிமாதமிழ்த் திரையுலகில் திரைப்பட தொழிலாளர்களின் பாதுகாப்பான அமைப்பாக சொல்லப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட 24 சங்கங்களில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் சங்கக் கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நீதிமன்ற உத்தரவுப்படி பூட்டி சீல் வைக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றிலேயே ஒரு சங்கத்தின் கட்டிடத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது இதுதான் முதல் முறை. இந்த வரலாற்றிற்கு சொந்தக்காரர் நடிகர் ராதாரவி.
திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் பேசும் வசனங்களைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு திரைக்கு பின்னால் குரல் கொடுப்பது டப்பிங் கலைஞர்கள் தான். இந்த டப்பிங் கலைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு வேண்டும் என 1981 ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் நடிகர் ராதாரவி இந்த சங்கத்தின் நிர்வாகத்திற்கு வந்தபிறகு சங்கத்திற்கு என சொந்தக் கட்டிடம் கே.கே.நகரில் உள்ள விஜயராகவபுரத்தில் வாங்கப்பட்டது.
இந்தக் கட்டிடம் 47 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். ஆனால் சங்க வரவு செலவு புத்தகத்தில் நடிகர் ராதாரவின் நிர்வாகம் 75 லட்சம் என கணக்கு காட்டி இருக்கிறார்கள். இதோடு இல்லாமல் காலி இடம் மட்டும் வாங்கியதாகவும், அந்த இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என மேலும் 40 லட்சம் செலவாகும் என சங்கத்தின் பணத்தை எடுத்துள்ளார்களாம். அந்தக் கட்டிடத்திற்கு “டத்தோ ராதாரவி வளாகம்” என பெயரிட்டு நிர்வாகிகள் சொகுசாக இருப்பதற்காக 14 ஏசி மற்றும் ஷோபாக்கள் வாங்கியிருக்கிறார்கள்.
இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் தினசரி கஷ்டப்பட்டு உழைத்து சந்தாப்பணம் செலுத்திய பணத்தில், உறுப்பினர்கள் யாரும் எந்தப் பலனும் அனுபவிப்பது கிடையாதாம். உலகத்திலேயே ஒரு தொழிலாளி கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பளத்தை சங்கத்தின் நிர்வாகிகள் வசூலித்து 10% எடுத்துக் கொண்டு மீதிப்பணத்தை தொழிலாளர்களுக்கு கொடுப்பது இந்த ராதாரவி தலைவராக இருக்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது என்கிறார்கள். இந்த சங்கத்தில் உறுப்பினராக சேரவேண்டுமானால் 1.50 லட்சம் ரூபாய் ராதாரவியிடம் கொடுக்க வேண்டுமாம். இந்தப் பணம் சங்கத்திற்கு முழுமையாக வருகிறதா என்றால் இல்லையாம். வெறும் 20 ஆயிரம், 10 ஆயிரம் என சங்கத்தின் வரவு, செலவு கணக்கில் காட்டப்பட்டுள்ளதாம்.
மேலும் சங்கத்திற்கு வாங்கிய இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சியில் கட்டிட அனுமதி வாங்க வேண்டும் என 75 ஆயிரம் பணத்தையும் ராதாரவி எடுத்துள்ளார். ஆனால் ராதாரவியின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்காமல் இருந்துள்ளனர். பின்னர் இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் ராதாரவி நிர்வாகத்திற்கு வந்த பிறகு நடைபெற்ற முறைகேடுகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியே கொண்டுவந்த உறுப்பினர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியிருக்கிறார் ராதாரவி.
இந்நிலையில் சங்கத்திற்கு தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் ராதாரவி தனியாக அணி அமைத்து போட்டியிடுகிறார். இவரது அணியை எதிர்த்து சிலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் ராதாரவி அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெறுகின்றனர். நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வில் தன்னை சிங்கமாகவும், எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர்களை நாய்கள் எனவும் விமர்சித்து ஆணவமாக பேசியிருக்கிறார். மேலும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகை குஷ்பூவை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்து பேசினார்.
சில நாட்களில் அதாவது கடந்த 2022 செப்டம்பர் 20ஆம் தேதி ராதாரவி தலைமையில் இயங்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் கட்டிடத்திற்கு மாநகராட்சியில் கட்டிட அனுமதி வாங்காததால் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை பூட்டி சீல் வைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அடுத்த நாள் நமது இணையதளத்தில் டப்பிங் யூனியனுக்கு சீல் வைக்கப்படும் என செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தி எதிரொலியின் காரணமாக உறுப்பினர்கள் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்திடம் கேட்டபோது நக்கலாக பதிலளித்துள்ளார் ராதாரவி. அதன்பிறகு நீதிமன்றம் சென்று 6 மாத காலம் அவகாசம் வாங்கினார்.
ஆனால் ஆறு மாத காலம் அவகாசம் முடிந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்தச் சங்கத்தின் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் திரைப்படத்துறையினர் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக சினிமாத்துறை பிரபலங்களும், டப்பிங் யூனியன் உறுப்பினர்களும் நம்மிடம் கூறுகையில், நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த போது நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தன்னிச்சையாக விற்றதாக, நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் விரைவில் ராதாரவிக்கு எதிரான தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் தற்போது டப்பிங் யூனியனில் அவர் செய்த முறைகேடுகளின் பலனாக அந்த சங்கத்தின் கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இவருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் சங்கத்தின் பணத்தைத்தான் செலவு செய்துள்ளார்.
இதுவரை ராதாரவி தனது அரசியல் செல்வாக்கால் அதாவது கடந்த ஆட்சிக்காலத்தில் வழக்குகளை தாமதப்படுத்தி தண்டனையிலிருந்து தப்பித்து வந்தார். இனிவரும் ஒவ்வொருமாதமும் ராதாரவி சிக்கலில் சிக்கித் தவிக்கும் காலமாகவே அமையப்போகிறது. அதற்கு சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றே சாட்சி என்கிறார்கள் வேதனையுடன்…
– சூரியன்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சமீப காலமாக அதிர வைத்த மோசடி வழக்கும் போலீசாரின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிவக்குமார், அவரது சகோதரர் விஜயகுமார், சகோதரரின் மகன் ராகுல் […]
தமிழகம்திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சமீப காலமாக அதிர வைத்த மோசடி வழக்கும் போலீசாரின் செயல்பாடுகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிவக்குமார், அவரது சகோதரர் விஜயகுமார், சகோதரரின் மகன் ராகுல் பாலாஜி, அழகு நிலையம் நடத்திவந்த பிரவினா ஆகியோர் கோவை திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்பாவிகளை குறி வைத்து கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்து தப்பி ஓடி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடியின் மூளையாக செயல்பட்ட சிவக்குமார் முதலில் சொத்துகளை வைத்து கடன் தேவைப்படுவோரின் விபரங்களை தரகர்கள் மூலம் தெரிந்துகொண்டு தொழில் துவங்கி பார்ட்னர்களாக்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி ஆசை வார்த்தை கூறி தனது வலையில் விழவைத்துவிடுவது வழக்கம். பின்னர் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து பதிவில்லா பங்குதாரர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே வங்கிக்கணக்கில் இருந்து கடனாக பெற்ற தொகையை வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றி மோசடியாக பணத்தை அபகரித்துவிட்டு பின்னர் ஒரு தவணை கூட செலுத்தாமல் ஏமாற்றிவிடுவாராம்.
சொத்துப்பத்திரத்தை கொடுத்தவர்கள் மாதா மாதம் பங்குப்பணம் கொட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தால் கடைசியில் வங்கி ஜப்தி நோட்டீஸ் வந்த பிறகு தான் தாங்கள் மோசடி செய்யப்பட்ட விபரமே தெரிய வரும். பின்னர் சிவக்குமாரை தேடினால் எஸ்கேப் தான். மோசடி மன்னன் சிவக்குமாரின் பின்னனி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப கால கட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளர் ஒருவரின் துணையுடன் இது போன்ற மோசடி வேலையை துவங்கியபோது மேலாளரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது. பின்னர் கோவையில் பிரமாண்டமாக அலுவலகத்தை துவங்கிய சிவக்குமாருக்கு பல்லடத்தை சேர்ந்த அழகு நிலைய பெண் பிரவினாவின் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் பிரவினாவை பயன்படுத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் சொத்துப்பத்திரத்தை பெற்று மோசடியாக ரூபாய் 2 கோடியும், திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 4 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்து 528 ரூபாயும், கோவையை சேர்ந்த சத்யமூர்த்தி என்பவரிடம் 55 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் 1 கோடியே 75 லட்சமும், ஊத்துகுளியை சேர்ந்த சந்திரகலா என்பவரிடம் 1 கோடியே 50 லட்சமும், திருப்பூர் ரத்தினசாமி என்பவரிடம் கோடிக்கணக்கு மதிப்பிலான பத்திரம் மற்றும் ரொக்கம் ரூ. 10 லட்சத்து 75 ஆயிரமும் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள மோசடியில் குமரேசன் மற்றும் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரேசனின் புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் பிரவினாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த இருவரும் தன்னை மிரட்டுவதாக குமரேசன் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் பேரில் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிரவினா மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சத்தியமூர்த்தி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவக்குமார், விஜகுமார், ராகுல் பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் திருப்பூர் ரத்தினசாமி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊத்துகுளியை சேர்ந்த பெரியசாமி, சந்திரகலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பிரவினா, சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி, சரவணன் ஆகியோரை தேடிவருவதோடு சம்பந்தப்பட்டவர்களின் வீட்டின் கதவுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிவக்குமார், ஆடிட்டர் சரவணன், ஜெகநாதன், விஜயகுமார், ராகுல்பாலாஜி, பிரபு, வங்கி மேலாளர் மதன் மோகன் ஆகிய 7 பேர் மீது திருப்பூர் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது கடந்த பல மாதங்களாக பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்து காத்திருந்து புகார் மனு அளித்தும் காலதாமதமாக நடவடிக்கை எடுப்பதாக வேதனை தெரிவித்தனர். கோடிக்கணக்கு மதிப்பிலான மோசடி வழக்கை கான்ஸ்டபிள் பதவியில் இருபவரை கொண்டு விசாரித்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில் தயக்கம் காட்டுவதால் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று போராடும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் குமரேசன் கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தமிழரசன் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் அவரது மகள் மாதரசியும் அடுத்தடுத்து தறகொலை செய்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தமிழரசன் குறித்து கேட்டபோது கூடிய விரைவில் பிடித்துவிடுவதாகவும் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தனர்.
இந்நிலையில்.திருச்சியில் பதுங்கியிருந்த பிரவினா பல்லடம் வந்த போது போலீசார் சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதனிடையே வங்கியில் கடன் கொடுத்த அதிகாரிகள் பத்திரப்பதிவுத்துறையில் பதியப்படாத ஒப்பந்தப்பத்திரத்தை ஏற்றுகொண்டு எப்படி கோடிக்கணக்கில் கடன் கொடுத்தனர்?
கடனை பெற்றவர்களின் தொழில் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சிவக்குமார் என்கிற தனி நபரின் சிபாரிசில் கோடிக்கணக்கில் கடன் கொடுத்தது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். சாதாரணமாக வங்கியில் 100 ரூபாய் எடுப்பதற்கே கையெழுத்தில் சிறிது மாற்றம் இருந்தால் ஒத்துக்கொள்ளாத வங்கி அதிகாரிகள் கோடிக்கணக்கில் கடன் கொடுக்கும் போது தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தால் இது போன்ற மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.
வங்கி கொடுத்த கடனுக்கு அடமானமாக சொத்துக்களை வாங்கியிருந்தாலும் கடன் கொடுப்பது பொதுமக்களின் பணம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்படவேண்டும். மேலும் சிவக்குமார் மோசடி வழக்கை சிபிசிஐடி க்கு அல்லது சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கின் உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.
– நமது நிருபர்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் […]
சினிமா தமிழகம்தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக வழக்குகள், வழக்குகளை காரணம் காட்டி பதவிக்காலம் முடிந்தும், இதே நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் என சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
இது சம்பந்தமாக விசாரித்தபோது… இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும், போட்டியிடுகின்றனர். முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இதேபோல் மன்னன் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் திடீரென மைக்கேல் ராயப்பன் முரளியைச் சந்தித்து அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் வெற்றிபெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எத்தனை அணிகள் போட்டியிட்டாலும், இறுதிவரை அதே அணியில் தான் தேர்தலைச் சந்திப்பார்களே தவிர இதுபோன்று குதிரை பேரம் பேசி ஆட்களைத் தூக்கியதில்லை என்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் கார்பரேட் நிறுவனத்தினர். இவர்கள் ஏன் திடீரென தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், முரளியும், வி. கிரியேஷன்ஸ் தாணுவும் தற்போது கடனில் தத்தளித்து வருகிறார்களாம். ஆகையால் கார்பரேட் நிறுவனங்களில் பலகோடி கடன் பெறும் நோக்கத்தில் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவருக்கும் பதவி ஆசையைத் தூண்டி தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் வெற்றிபெற வைக்கிறோம் என வாக்குறுதி அளித்து அழைத்து வந்தார்களாம்.
ஆனால் இருவரது எண்ணத்திற்கு மாறாக மன்னன் அணியில் மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் பலமான வேட்பாளர்களாக பேசப்பட்டதால் ஒருவார காலமாக முரளி மிகவும் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகினாராம். அப்போது தாணு முரளியை சமாதானம் செய்து மன்னன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் ராயப்பனை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள குதிரை பேரம் பேசுமாறு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சந்திரபோஸை மைக்கேல் ராயப்பனிடம் பேரம்பேசி அழைத்து வருமாறு நியமித்திருக்கிறார்கள்.
மைக்கேல் ராயப்பனை வாபஸ் வாங்க வைப்பதற்காக கார்பரேட் நிறுவனத்தினரிடம் சில கோடிகளைப் பெற்றுக்கொண்டு மைக்கேல் ராயப்பனுக்கு சில கோடியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை தாணுவும், முரளியும் பங்கு போட்டுக் கொண்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அரசியலில் சுயலாபத்துக்காக அணி மாறிய மைக்கேல் ராயப்பன் சங்கத்தில் அணிமாறியது ஒன்றும் புதிதல்ல எனவும் பேசி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களிடம் தேதியை பெற்று மற்ற தயாரிப்பாளர்களுக்கு சிரமத்தை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை அழித்தவர்தான் தாணு. இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக முழு முயற்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார். அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூடியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான […]
அரசியல் தமிழகம்அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.
அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூடியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசைக் கண்டித்து உட்பட மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயக்குமார்: அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்தார். அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான் என்றும் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர் என்றும் அண்ணாமலையைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். எடப்பாடி கூறியதை போல அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அவர் பேசி வருகிறார். எங்க அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். நாங்கள் 30, 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளோம். ஆனால், அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் தான் அரசியலில் இருந்துள்ளார்.
அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டியை போன்றவர். முதிர்ச்சி இல்லாமல் பேசுபவர் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கிறது. இதன் காரணமாகவே மாநில தலைவர் என்ற முறையில் அவரை பேசி வருகிறோம். வளர்த்தி கிடா மார்பில் பாய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் நாங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறோம்.
அண்ணாமலை ஏன் பேயா, பிசாசா.. அவரை கண்டு பயப்பட.. நாங்கள் பல அடக்குமுறைகளை நிறைந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தையே பார்த்தவர்கள். அதிமுகவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள். ஏகப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி அதிமுக மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உள்ளது. எனவே, யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி தாக்கு: அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது.முன்னதாக நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை கற்பனை கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் கட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அவர் சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.