இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட […]
சினிமாநகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் […]
சினிமாஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”. கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே […]
விமர்சனம்தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். பின்னர் கும்பகோணம் தனிப்படை […]
மாவட்ட செய்திகள்தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சரகம், பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேஷம்பாடி பகுதியில், தினந்தோறும் திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக, மாவட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
பின்னர் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில், பட்டீஸ்வரம் காவல்துறையினர், சேஷம்பாடி பகுதிக்குச் சென்றபோது, சேஷம்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செட்டிபாளையத்தைச் சேர்ந்த சாமி அய்யா, தேவா, நாச்சியார் பாளையம் கூகூரைச் சேர்ந்த மனோஜ் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் மூலம் இரண்டு டிராக்டர், டிப்பர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர், அனைவரையும் கைது செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
– மாலிக்
மாவட்ட செய்தியாளர்.
டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் […]
சினிமாடி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை அதிதி பாலன் பேசுகையில், மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நான் மிகவும் ரசித்து விருப்பத்துடன் பணியாற்றிய படம் இது. படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா திறமையான இயக்குநர். நடிகர்களிடமிருந்து தனக்கு தேவையான நடிப்பை நேர்த்தியாக வாங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் நானி சிறந்த மனிதர். சக நடிகர் – நடிகைகளை அன்புடன் நேசிப்பவர். முதலில் அவர் திரையுலகில் படத்தை இயக்குவதற்காக தான் வருகை தந்திருக்கிறார் என்ற விசயம் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளில் நடிக்கும்போது அவர் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார் அது எனக்கு பிடித்திருந்தது.
பிரியங்கா மோகனுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதிலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். இந்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.
படத்தில் நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னை ஆசீர்வதித்தார். ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன் என்றார்.
நடிகை அபிராமி பேசுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். அற்புதமான படத்துடன் வருகை தந்திருக்கிறோம். இந்தப் படத்தில் மட்டுமல்ல. படப்பிடிப்பு தளத்திலும் நிறைய பாசிட்டிவிட்டி இருந்தது. நானியை ஈயாக பார்த்திருக்கிறோம். புராண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பரிட்சார்த்த முறையில் நடித்து வரும் திறமைசாலி. இயக்குநரும் , நடிகருமான எஸ். ஜே. சூர்யாவிடம் ஒரு மேஜிக் இருக்கிறது. அது இந்த படத்திலும் இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
இயக்குநர் விவேக்- இந்த படத்தில் நாயகனுக்கு அழகான அம்மா கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார். திறமையான இயக்குநர். கலைஞர்களிடமிருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை திறமையாக வாங்கி விடுவார். அனைவரும் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், தற்போது நான் நடித்திருக்கும் சூர்யாஸ் சாட்டர்டே எனும் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பிற்காக உங்களை சந்திக்கிறேன். ‘கேங் லீடர்’ படத்திற்கு பிறகும் நானியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் சாருலதா என்கிற ஒரு அழகான கதாபாத்திரத்தில் பெண் காவலராக நடித்திருக்கிறேன். இயக்குநர் விவேக் இந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் இந்த கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருக்கும்.
எஸ் ஜே சூர்யாவுடன் ‘டான்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறேன். ஏராளமான சுவாரசியமான திருப்பங்களும் இருக்கும். அதிதி பாலன் மற்றும் அபிராமியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம் என்றார்.
நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், நானியை முதலில் வரவேற்கிறேன். அவர் ஏற்கனவே தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் என்றாலும் அவரை மீண்டும் மனதார வரவேற்கிறேன். இங்கு உள்ள குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் நானி பரிச்சயமானவர். பெருந்தன்மையானவர். அற்புதமான நடிகர். தெலுங்கில் அவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என பட்டம் வழங்கி இருக்கிறார்கள்.
‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமான அபிராமி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது. அது வந்து விட்டால், வாய்ப்புகள் குவியத் தொடங்கும் அது போல் தற்போது அபிராமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மனமார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தெலுங்குகாரராக இருந்தாலும் சென்னையில் படித்த பையன். அதனால் அவர் சென்னை வாசி தான். அவருக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- அபிராமி- பிரியங்கா மோகன் -அதிதி பாலன் -என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். நானியும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான்.
நானி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடம் ஏராளமான அன்பை சம்பாதித்து இருக்கும் ஒரு நட்சத்திர நடிகர். தமிழ்நாட்டிலும் அவர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார்.
எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்றால், அந்தத் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அண்மையில் ‘ராயன்’ வெளியானது. பெரும் வெற்றியை பெற்றது. எனக்கும் நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படம் வெளியாகிறது.
நான் ஏன் இந்த படத்தை ராயனுடன் ஒப்பிட்டு பேசுகிறேன் என்றால், அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக்கதை இருக்கிறது.
இதுவரை பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திற்கும் அடிப்படை மாணிக்கம்- பாட்ஷா தான். இதை வைத்து தான் அனைத்து ஆக்சன் படங்களும் உருவாகின்றன. மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படை தான் இருந்தது. அதாவது பாட்ஷாவாக இருப்பார். ஆனால் சூழ்நிலைக்காக தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மாணிக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பார். இது எப்போதும் வெற்றி பெறும் சினிமா சூத்திரம்.
இந்த தருணத்தில் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த ஃபார்முலாவில் வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார். அது என்னவெனில் ஒரு பையன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்று சொன்னால் அவன் கேட்பதாக இல்லை. அதனால் அவனது தாயார், ‘நீ கோபப்படு. அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோபப்படாதே. வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என சொல்கிறார். அது என்ன கிழமை என்றால் சனிக்கிழமை அது ஏன் என்பதற்கு நீங்கள் படத்தை பார்த்தால் புரியும்.
அதனால் இந்த படத்தில் கதையின் நாயகனான சூர்யா ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கோபமே படாமல் இயல்பான மனிதனாக இருப்பார். அதாவது மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் அவர் பாட்ஷாவாக மாறுவார். இதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட்.
இது ஹீரோவின் கோபத்தை உணர்த்துகிறது. அதே போல் இந்த படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு கோபம் இருக்கிறது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விசயம் கிடைக்காததால் நான் அரக்கத்தனமாக நடந்து கொள்கிறேன். இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால், என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இதனை இயக்குநர் விவேக் ஆத்ரேயா நேர்த்தியாகவும் அழகாகவும் அற்புதமாகவும் திரையில் செதுக்கியிருக்கிறார்.
கடந்த காலங்களில் நாகார்ஜூனா நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘உதயம்’ படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ, அது போன்றதொரு வித்தியாசமான அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம்தான் இது. அதனால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்றார்.
நடிகர் நானி பேசுகையில், ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன். இங்கு மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன். குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிப்பேன்.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும், நலம் விசாரிப்பதாகட்டும், அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது. தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம். பொதுவாக இந்த கால ரசிகர்களுக்கு ஆக்சன் படம் என்றால் பிரம்மாண்டமானதாகவும் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும். அந்த பாணியில் ஏராளமாக படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். அந்த வகையில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ எளிமையான ஆக்சன் என்டர்டெய்னர்.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தமிழ் மக்களின் உணர்வு, தெலுங்கு மக்களின் உணர்வு என பாகுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய திரை மொழி தனித்துவமானது. அனைவருக்குமானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது என்னுடைய நம்பிக்கை.
இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ் ஜே சூர்யாவுக்கு தான் பொருத்தமானது. என்னைப் பொறுத்தவரை இது எஸ் ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவும். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதற்காகவும், நடித்ததற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்த போது சில விசயங்களை கற்றுக் கொண்டேன்.
பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் நேச்சுரல் ஸ்டார். அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.
அதிதி பாலன்- பத்ரா எனும் கதாபாத்திரத்தில் என்னுடைய சகோதரியாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடனும் இணைந்து நடித்ததற்காக பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தில் நான் -அதிதி பாலன்- பிரியங்கா மோகன் -அபிராமி -சாய்குமார் – குடும்பமாக நடித்திருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் அவருக்கு ஏராளமான சிக்கல்கள் இருந்தாலும் சிரித்தபடியே நடித்துக் கொடுத்தார்.
அபிராமி – கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதை ரசிகர்களும் திரையில் பார்த்து பாராட்டினை தெரிவிப்பார்கள் என்றார்.
வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கவிதா. இவர் சென்னை பத்திரப்பதிவுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உதவியாளராகவும், சார் பதிவாளர் (பொறுப்பு) பணியில் பணியாற்றி உள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி […]
மாவட்ட செய்திகள்வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கவிதா. இவர் சென்னை பத்திரப்பதிவுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உதவியாளராகவும், சார் பதிவாளர் (பொறுப்பு) பணியில் பணியாற்றி உள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளர் பணிக்கு வந்தலிருந்தே பல்வேறு முறைகேடான பத்திர பதிவுகளை செய்து வந்ததுடன், 15.12.2023 அன்று காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட ஏரந்தாங்கல் கிராமத்திற்கு உள்ளடங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுயுள்ள சரஸ்வதி என்பவரின் பெயரில் உள்ள (D.C land) இடமானது சர்வே எண் 335/1B3. 8. சென்ட் இடத்தை காட்பாடி சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
பதிவு எண் : 11677/2023. இந்த 8 சென்ட் இடத்திற்கு பத்திர பதிவு செய்ததுடன். (D.C land) பத்திரப்பதிவு செய்தபவர்களிடமிருந்து முழு ஆவணம் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் (D.C land) இடமானது வைத்திருப்பவர்கள் தனது ரத்த சொந்த பந்தங்களுக்கு மட்டும் பெயர் மாற்றம் பதிவு செய்து கொள்ளலாம். மாற்றாக வேறு யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது. அவ்வாறு அந்த இடத்தை வேறு யாராவது வாங்கினாலும் அது செல்லாது. இந்த நிலையில் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்தபோது கவிதா என்பவர் முறைகேடாக பத்திர பதிவு செய்ததாக கவிதா, வேலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு மூன்று மாதம் கழித்து கே.வி. குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளர் பதவிக்கு, மீண்டும் பணியிட மாற்றம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதா. இவர் ஒரு புரோக்கரிடம் பத்திரப் பதிவு செய்ய லஞ்சமாக வாங்குவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சார்பதிவாளர் கவிதா லஞ்சமாக கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகையில், ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம். 75 இதில் உள்ளது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது பதிவாகியுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதா முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கவிதாவை தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கே.வி. குப்பம் சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதாவிற்கு சென்னையில் மட்டுமே கோடி கணக்கில் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், மேலும் தனது சொந்த ஊரான குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிலங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில், பல கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கவிதாவின் ரத்த ரத்த சொந்தங்களான, மகள்கள் மற்றும் மருமகன், சம்மந்தி ஆகிய உறவினர்கள் பெயருக்கு போன் பே, கூகுள் பே போன்ற ஆப் மூலம் லஞ்சமாக பெற்ற பணமானது பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் தயாரிப்பில், எஸ். பாண்டி இயக்கத்தில், சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராபர்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் […]
சினிமாஇம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா எஸ் தயாரிப்பில், எஸ். பாண்டி இயக்கத்தில், சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ட்ராயன், டேனி போப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராபர்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் “ராபர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பாளர் கவிதா எஸ், இயக்குனர் எஸ். பாண்டி, நாயகன் சத்யா, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள “மெட்ரோ” படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் பேசுகையில்.. பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தலைநகரான சென்னைக்கு வேலை தேடி வருகின்றனர். அவ்வாறு வேலை தேடி வந்த ஒரு இளைஞன், சென்னை மக்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து தானும் இதுபோன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறான். தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருப்பதால், அவன் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அவனது பேராசையால் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் தேர்ந்தெடுத்த பாதை அவனுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே “ராபர்” படத்தின் கதை என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தயாரிப்பாளர் கவிதா எஸ் பத்திரிகையாளராக சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் உருவாக்கிய “எண்ணம் போல் வாழ்க்கை” இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோடை விருந்தினராக மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில், இந்திய கடலோர காவல்படையின் புதிய அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) இன்று திறந்து வைத்தார். அத்துடன் சென்னை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய கடல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தையும் (RMPRC), புதுச்சேரியில் […]
தமிழகம்இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில், இந்திய கடலோர காவல்படையின் புதிய அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) இன்று திறந்து வைத்தார். அத்துடன் சென்னை துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய கடல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தையும் (RMPRC), புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல்படை விமான தள வளாகத்தையும் அவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை நேப்பியர் பாலம் அருகே சுமார் ரூ.26.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் தத்தளிக்கும் மாலுமிகள், மீனவர்கள் போன்றோரை மீட்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள உதவும். இது, தகவல்களை தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வசதிகள் மூலமாக பெற்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. தேடல் மற்றும் மீட்பு நடைமுறைகள், கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் அதிக அனுபவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையின் பணியாளர்கள் இதில் எந்நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்புதிய மையம் இந்தியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து கடல்சார் மீட்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து, மீனவர்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்வதற்கான மையமாக செயல்படும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை துறைமுக வளாகத்தில், இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய கடல் மாசுக்கட்டுப்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார். இது, இந்தியப் பெருங்கடலையொட்டிய கடலோரப்பகுதிகளில் கடல் மாசுபாடு, குறிப்பாக எண்ணெய் மற்றும் இரசாயன மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்குரிய முக்கிய வசதியாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) கடல் மாசுபாட்டை அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இம்மையம் சென்னையில் அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை, 22 நவம்பர் 2022 அன்று கம்போடியாவில் நடைபெற்ற முதல் இந்திய-ஆசியான் கூட்டத்தின் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார். எண்ணெய் மாசுபாடு போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க இம்மையத்தில் கடலோர காவல்படை பணியாளர்கள் 24 மணி நேரமும் செயல்படுவர். எண்ணெய் கையாளும் முகமைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கேற்பாளர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு மாசு எதிர்ப்பு நுட்பங்கள் குறித்த பயிற்சியையும் இந்த மையம் வழங்கும். இது தவிர, கடலில் எண்ணெய் மாசுபாட்டை அகற்றுவது குறித்து நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கும் இம்மையம் பயிற்சி அளிக்கும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமான தள வளாகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது இந்திய கடலோர காவல் படைக்கு ஒரு மிகச்சிறந்த கடடமைப்பாக அமைகிறது. புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடற்கரையோரங்களில் கடல் பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கும். இவ்வளாகத்தில் சேத்தக் மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும். கடல் ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு போன்ற பணிகளை இவை மேற்கொள்ளும் திறன் கொண்டவை.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் பிரதிநிதிகள், மத்திய-மாநில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கே.ஜே.பி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் கே.ஜே. பாலமணிமார்பன், சுரேஷ்குமார், கோகுல் பினாய் ஆகியோர் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சோஃபியா, சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ், ஜனனி, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் […]
விமர்சனம்கே.ஜே.பி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் கே.ஜே. பாலமணிமார்பன், சுரேஷ்குமார், கோகுல் பினாய் ஆகியோர் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையரசன், சோஃபியா, சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ், ஜனனி, ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ஹாட் ஸ்பாட்”.
கதைப்படி… திருமண சம்பரதாயங்களில் காலங்காலமாக கடைபிடித்து வரும் சடங்குகளை கடைப்பிடிக்காமல், சற்று வித்தியாசமாக பெண் ஆணுக்கு தாலி கட்டி, பெண் வீட்டிற்கு அழைத்துச்சென்று வாழ்வதும், வீட்டிற்கு வாழ வந்த ஆண், அலுவலகத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்வதும், அந்த வீட்டில் அவரது மாமனாரும் கழுத்தில் தாலியோடு, மருமகனை வேலைகள் வாங்குவதும் என கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக, இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என முடிவுசெய்து, முதலில் பெண் தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கியவுடன், ஆணின் பெற்றோரிடம் இருவரும் பேசுகின்றனர். அப்போது இருவருக்குமான முரண்பாடான உறவுமுறை தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என இன்னொரு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பையனும், பெண் பத்திரிகையாளரும் காதலிக்கின்றனர். பையனுக்கு வேலை பறிபோனதும், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண் விபச்சாரனாக மாறி, வசதி படைத்த பெண்களிடம் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து பணம் சம்பாதிக்கிறான். இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்ததும் என்ன நடக்கிறது என மூன்றாவது கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் ஏழ்மையான ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தில், தனது ஆறு வயது பெண் குழந்தையும், நான்கு வயது பையனும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகி, அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிறார்கள். அதன்பிறகு அந்த குடும்பமும் வசதியாகிறது. இந்நிலையில் அந்தப்பெண் திடீரென இறந்துவிட, அவள் இறப்பிற்கு அவரது மனைவிதான் காரணம் என்கிறார் ஆட்டோ ஓட்டுநர். அதற்கான காரணம் என்ன என நான்காவது கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
மேற்கண்ட குதர்க்கமான நான்கு கதைகளையும், நேர்த்தியான வசனங்கள் மூலம் நிகழ்கால சம்பவங்களையும், மக்களுக்கு நினைவூட்டும் வகையில் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்ச்சி படுத்திய நடிகர்களில் முக்கியமான நபர் நடிகர் கவுண்டமணி. இவரது நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசித்து சிரிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்றால், எவரும் இல்லை என்றே பதில் வரும். அந்தளவிற்கு இவரது கவுண்டமணி […]
சினிமாதமிழ் திரையுலகில் நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்ச்சி படுத்திய நடிகர்களில் முக்கியமான நபர் நடிகர் கவுண்டமணி. இவரது நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து ரசித்து சிரிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்றால், எவரும் இல்லை என்றே பதில் வரும். அந்தளவிற்கு இவரது கவுண்டமணி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பல வருடங்களாக நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்ப உறவுகளுடன் சந்தோஷமாக நாட்களை கழித்து வந்த நடிகர் கவுண்டமணியிடம், பல இயக்குனர்கள் அழைத்தும் நடிக்க மறுத்து வந்தார். ஆனால் இனி நடிக்கவே கூடாது என்கிற மனநிலையில் இருந்துவந்த கவுண்டமணியின் மனதை மாற்றியிருக்கிறார் அவருடன் நீண்ட காலமாக பயணித்த ராஜ கோபால் என்பவர்.
இந்த ராஜ கோபால் தான் பல வருடங்களாக கவுண்டமணிக்கு நகைச்சுவை ட்ராக் எழுதி வந்தாராம். இவர் தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கதையை “ஒத்த ஓட்டு முத்தையா” என்கிற தலைப்பில் கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையைக் கேட்டதும் மீண்டும் நடிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஆசை கவுண்டமணியின் மனதில் எழுந்துள்ளது. இதற்கான வேலைகளும் ஜரூராக நடைபெற்று வருகிறதாம்.
இந்த தகவலை சமீபத்தில் கவுண்டமணியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வருகைதந்த முக்கியமான பத்திரிகையாளர்களிடம் நடிகர் கவுண்டமணி தெரிவித்துள்ளார். இந்த தகவலை அங்கிருந்த இயக்குனர் ராஜ கோபாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் வெங்கடேஷ். நீண்ட காலமாக தெலுங்கு ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பரான வசூலையும் கொடுத்துள்ளது. இவரது 75 வது படத்தின் […]
சினிமாதெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் வெங்கடேஷ். நீண்ட காலமாக தெலுங்கு ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பரான வசூலையும் கொடுத்துள்ளது. இவரது 75 வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் வெங்கடேஷின் 75வது படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் இரண்டு அட்டகாசமான வில்லன் கதாப்பாத்திரங்களாம், அதற்காக இந்தியிலிருந்து நவாசுதீன் சித்திக்கையும், தமிழிலிருந்து சமுத்திரக்கனியையும் அனுகியிருக்கிறார்கள்.
நவாசுதீன் சித்திக் உடனே ஓகே சொல்லிவிட, சமுத்திரக்கனி தேதிகூட ஒதுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறாராம். அதனால் சமுத்திரக்கனி கதாப்பாத்திரத்திற்கு நடிகர் பசுபதியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
நவாசுதீன் சித்திக்கைவிட வலுவான கதாப்பாத்திரமாம் பசுபதிக்கு, பசுபதி ஏற்கனவே வில்லன், குணச்சித்திரம் என பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமுத்திரக்கனியின் நடிப்பை விரும்பிய வெங்கடேஷின் விருப்பத்தை பசுபதி பூர்த்தி செய்வார் என்கிறாராம் படத்தின் இயக்குனர்.
சமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. இதனைத் […]
சினிமாசமீபத்தில் வெளியான நானியின் தசரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்துள்ளது. இனி கதைத் தேர்வில் மிகுந்த கவனம் காட்டுவதே நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன அறிவுரை, நானியை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பலரிடமும் கதை கேட்ட நானி, அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் கைகோர்க்க முடிவெடுக்கிறார். ஜித்து ஜோசப் சொன்ன க்ரைம் த்ரில்லர் கதை நானிக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
நடிகை ஶ்ரீ தேவி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இளம் வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் என முன்னனி நட்சத்திரங்களுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போது, இந்தி திரையுலகில் […]
சினிமாநடிகை ஶ்ரீ தேவி விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து இளம் வயதிலேயே எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரஜினி, கமல் என முன்னனி நட்சத்திரங்களுடனும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் போது, இந்தி திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே குடியேறி இல்லற வாழ்க்கையை தொடங்கினார். சில காலம் கழித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது இறுதிக் காலங்களில் மீண்டும் தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜய்யிடன் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.
அவரைப் போலவே அவரது மகள் ஜான்வி கபூரும் தமிழ் திரையுலகில் தனது அம்மாவைப் போல் புகழ் பெற வேண்டும் என, தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஜான்வி கபூர், இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என திரையுலகினர் மத்தியில் பேசப்படுகிறது. இரு தரப்பிலும் இது குறித்த விளக்கம் வெளியாகாத நிலையில், இந்தியில் அருண் தவானை வைத்து இயக்கவிருக்கும் படத்தில்தான் ஜான்வி கபூரை ஜோடியாக்க அட்லி திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
உண்மையில் தமிழில் பக்காவான எண்ட்ரி கொடுக்கத்தான் நல்ல இயக்குனரைத் தேடி வருகிறாராம் ஜான்வி கபூர். இயக்குனர் சங்கர் தொடங்கி அ. வினோத் வரை அத்தனை இயக்குனர்களும் தற்போது மிகவும் பிஸியாக இருப்பதால், நல்ல கதையுடன் யார் வந்தாலும் ஓகே என்கிறாராம் ஜான்வி கபூர்.