பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் […]
சினிமாஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வீர தீர சூரன்”. கதைப்படி.. கோவில் திருவிழா நாளன்று […]
விமர்சனம்நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் […]
சினிமாதிருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]
தமிழகம்திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணி பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்த நிலையில், மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்தன.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு முழு உடல் பரிசோதனை மேற்கொண்டதில், நுரையீரலில் நீர் கோர்த்திருப்பதாகவும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஒரு மாதம் கழித்து மணிக்கு பேச்சு வராமல் கஷ்டப்படவே, திரும்பவும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு மருத்துவர் வலி நிவாரணி மருந்து மாத்திரை கொடுத்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனிடையே 2024 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மணி திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பயாப்சி சோதனைக்கு கோவை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அங்கு மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 2023 ஆண்டு முதலே மணிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், 4 வது நிலையில் பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். தனது கணவர் மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு மனைவி சாதனபிரியா தனது நகைகளை விற்றும் வீட்டை அடமானம் வைத்து ரூ. 20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
இதனிடையே அவினாசி பைபாசில் செயல்பட்டு வரும் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் கணவர் மணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 03.02.2025 அன்று திருப்பூர் ஆட்சியரிடம் சாதன பிரியா புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு மீது விசாரணை மேற்கொண்ட இணை இயக்குனர் தனியார் மருத்துவமனைக்கு சாதகமாக செயல்படுவதாக சாதன பிரியா குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் கணவர் மணி வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்தமகன் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நிறுத்திய கொடுமையும் அரங்கேறியுள்ளது.
தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கணவரை எமனிடம் போராடி மீட்க மனைவி சாதனபிரியா போராடி வரும் நிலையில், வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
அதிகாலை முதல் வீட்டில் தையல் வேலை செய்தும், பனியன் நிறுவனத்தில் வேலைசெய்து அதில் வரும் வருமானத்தில் கணவரின் உயிரை காப்பாற்ற போராடி வரும் மனைவி சாதனபிரியா கூறும்போது, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சை அளிக்க 5 லட்சத்திற்கு 1.50 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், முழுமையாக சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு கணவர் உயிரை காப்பாற்ற உதவ வேண்டும் எனவும், காவல் துறை பாதுகாப்பு வழங்கிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி & ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில், சவுண்ட் இன்ஜினீயரிங் […]
சினிமாஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி & ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில், சவுண்ட் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.
மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார்.
2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார். இதை தொடர்ந்து, இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும், ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது.
இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள், ஒயிட் ரோஸ் ,
கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும், தற்போது வெளியாகியுள்ள
ராபர் படத்தைத் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார்.
ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது. மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார்.
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கவிதா எஸ் தயாரிப்பில், சத்யா, டேனி போப், ஜெயபிரகாஷ், தீபா, சென்ட்ராயன், ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ். எம். பாண்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராபர்”. கதைப்படி.. பட்டப்படிப்பு முடித்து விட்டு கிராமத்தில் இருக்கும் […]
விமர்சனம்இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கவிதா எஸ் தயாரிப்பில், சத்யா, டேனி போப், ஜெயபிரகாஷ், தீபா, சென்ட்ராயன், ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ். எம். பாண்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராபர்”.
கதைப்படி.. பட்டப்படிப்பு முடித்து விட்டு கிராமத்தில் இருக்கும் நாயகன் சத்யா, வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அவர் நினைத்தது போலவே ஐ.டி நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஐ.டி கம்பனியில் ஒரு பெண்ணை தன் வழிக்கு கொண்டு வருவதற்காக முயல்கிறார் சத்யா. ஆனால் பணம் இருந்தால் மட்டுமே அந்த பெண்ணை அடையமுடியும் என தெரியவர, ஆள் இல்லாத இடங்களில் தனியாக வரும் பெண்களிடம், முகத்தை மூடிக்கொண்டு ஜெயின் பறிப்பில் ஈடுபட்டு, நினைத்ததை சாதித்துக் கொள்கிறார் சத்யா.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, ராபரி வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். திருட்டு நகையை வாங்கும் கடைக்காரர் இறந்துபோக, டேனி என்பவரிடம் தொழிலை தொடர்கிறார். டேனியும் பகலில் ஐடி நிறுவனத்தில் வேலை. இரவில் ராபரி பிஸ்னஸ் செய்து வருகிறார். சத்யாவின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக, டேனி சத்யாவின் உதவிக்காக என ஒருவனை சேர்த்துவிடுகிறான். இருவரும் நிறைய இடங்களில் ஜெயின் பறிப்பில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்கூட்டரில் தனியாக வந்த பெண்ணிடம் ஜெயின் பறிப்பில் ஈடுபட்டபோது, அந்தப் பெண் இவர்களை விரட்டி வருகிறார். அப்போது ஏற்படும் விபத்தில் அந்தப் பெண் இறக்க நேரிடுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, போலீஸார் தனிப்படை அமைத்து வெளிமாநிலங்களுக்கு விரைகின்றனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் தந்தை ஜெயபிரகாஷ் தன் மகளுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி, குற்றவாளியை கண்டுபிடித்து பழிவாங்க நினைக்கிறார்.
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, சென்னை காவல்துறை கண்டுபிடித்தார்களா ? மகளின் மரணத்துக்கு காரணமான குற்றவாளியை பழிவாங்கினாரா தந்தை ? சத்யாவின் வாழ்க்கை என்னானது என்பது மீதிக்கதை…
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஜெயின் பறிப்பு, நகை திருட்டு சம்பவங்களும் நடைபெறுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் காவல் துறையோ வெளிமாநில கொள்ளையர்கள், அப்படி, இப்படி என ஏதேதோ கணக்கு காட்டி வழக்குகளை முடித்து விடுகின்றனர். குற்ற சம்பவங்களை நிகழ்த்தி விளையாட்டு மக்களோடு கலந்து தப்பித்துவிடும் குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இதை தைரியமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அற்புதமான திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் பாண்டி.
பெரும்பாலான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஆர். ராம் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ் வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில், ராஜீவ் கோவிந்த பிள்ளை, யுக்தா பெர்வி, ஹரிஸ் பெராடி , அபிஷேக் ஜோஸப் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டெக்ஸ்டர்”. கதைப்படி… நாயகன் […]
விமர்சனம்ஆர். ராம் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில், பிரகாஷ் எஸ் வி தயாரிப்பில், சூரியன் ஜீ இயக்கத்தில், ராஜீவ் கோவிந்த பிள்ளை, யுக்தா பெர்வி, ஹரிஸ் பெராடி , அபிஷேக் ஜோஸப் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டெக்ஸ்டர்”.
கதைப்படி… நாயகன் ராஜீவும், நாயகி யுக்தா பெர்வியும் ஒருவரையொருவர் நேசித்து, காதல் வானில் சிறகடித்து பறப்பதுபோல் சந்தோஷமாக சுற்றித்திரிகிறார்கள். காதல் மனைவிக்காக வாங்கிய வீட்டை காண்பிக்கக்க சென்றபோது, காதலி மர்மநபரால் கடத்தப்படுகிறார். பின்னர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், காதலியின் பிரிவை தாங்க முடியாமல், மதுவுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயல்கிறார்.
அப்போது நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு, பழைய நினைவுகளை அழிக்கும் புதிய சிகிச்சை அளித்து, புதிய மனிதராக வருகிறார். இந்நிலையில் புதிய வீட்டில், ஒரு பெண் இவரை சகோதர பாசத்துடன், இவருக்கு தேவையான உதவிகளைச் செய்கிறார். நாட்கள் கடந்த நிலையில், அந்தப் பெண்ணும் மர்ம நபரால் கடத்தப்படுகிறார்.
ராஜீவுக்கும், மர்ம நபருக்கும் என்ன சம்பந்தம் ? அவர் ஏன் யுக்தா பெர்வியை கடத்தி கொலை செய்தார் என்பது மீதிக்கதை..
இளம் வயதில் மனதில் வடுவாக உருவான சம்பவத்திற்கு, பழிவாங்குவது தான் “டெக்ஸ்டர்” படத்தின் கதை. இயக்குநர் மிகவும் திறமையாக த்ரில்லர், சென்டிமென்டுடன் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்துள்ளார். நாயகன் பாசம் கலந்த கோபக்கார கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகள் பிரமாதம். நாயகி யுக்தா பெர்வி, ஹரிஸ் பெராடி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
யாக்கை ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கார்த்திக் ஶ்ரீதரன் தயாரிப்பில், ராதாரவி, சரண் ராஜ், துஷ்யந்த், ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ஜீவா ரவி, மகேஷ்வரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வருணன்”. கதைப்படி.. வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்வதில் ராதாரவி, சரண் […]
விமர்சனம்யாக்கை ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், கார்த்திக் ஶ்ரீதரன் தயாரிப்பில், ராதாரவி, சரண் ராஜ், துஷ்யந்த், ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ஜீவா ரவி, மகேஷ்வரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வருணன்”.
கதைப்படி.. வடசென்னையில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் விநியோகம் செய்வதில் ராதாரவி, சரண் ராஜ் ஆகிய இரதரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. ராதாரவி சரண் ராஜ் இருவரும் பரஸ்பர புரிதலுடன் இருந்தாலும் ராதாரவியிடம் வேலை பார்க்கும் துஷ்யந்த், சரண் ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயன் தரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. ஏற்கனவே இருதப்பினரும் ஒருவர் தொழில் செய்யும் பகுதியில் மற்றவர் வியாபாரம் செய்யக்கூடாது என ஏரியா பிரித்துக் கொண்டு தொழில் செய்து வருகின்றனர்.
சரண்ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயன், தனது அக்கா மகேஸ்வரியின் துணையோடு தண்ணீர் கேன் தொழிலுடன் சுண்டக் கஞ்சியையும் சேர்த்து வியாபாரம் செய்து வருகின்றனர். சுண்டக் கஞ்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்த வியாபாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நினைத்து, இன்ஸ்பெக்டர் ஜீவா ரவி இவர்களை கண்காணித்து வருகிறார்.
இதற்கிடையில் துஷ்யந்த் கேப்ரில்லா இருவரும் காதலிக்கின்றனர். துஷ்யந்த் மீதான காதல் மிகுதியால் காலி தண்ணீர் கேன்களை அடுக்கி வைத்து அதில் துஷ்யந்த் உருவத்தை ஓவியமாக வரைகிறார். பின்னர் அந்த ஓவியம் வரைந்த கேன்களை எதிர் தரப்பினர் கொண்டு செல்வதாக தெரிந்ததும் துஷ்யந்த் விரட்டிச் செல்கையில் இன்ஸ்பெக்டர் ஜீவா ரவி அந்த வண்டியை நிறுத்தி விசாரிக்கிறார். அப்போது துஷ்யந்த் தனது கேன்களை எடுக்க முயற்சிக்கும் போது அந்த வண்டியில் சுண்டக் கஞ்சி இருப்பது தெரியவருகிறது. சரண் ராஜின் மைத்துனர் ஷங்கர் நாக் விஜயனை கைது செய்ததோடு குடோனையும் சீல் வைக்கிறார்.
பின்னர் இருதரப்பினர் இடையே பகை பெரிதாகிறது. துஷ்யந்த் கேப்ரில்லா காதல் நிறைவேறியதா ? இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பகையால் நடந்த விளைவுகள் என்ன ? என்பது மீதிக்கதை…
பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர்,இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அந்த தண்ணீரை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பவர்களின் செயல்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். ராதாரவி சரண் ராஜ் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகன் துஷ்யந்த் வடசென்னை வாசியாகவே வாழ்ந்துள்ளார். கேப்ரில்லா தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ்வரி கதாப்பாத்திரத்திற்கு தேவையான வில்லத்தனமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஷங்கர் நாக் விஜயன் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு […]
சினிமாஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை ‘பெருசு’ படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம். இதை சாத்தியப்படுத்தி கொடுத்த இளங்கோவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பவேஜா ஸ்டுடியோஸூம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்றார்.
எழுத்தாளர் பாலாஜி பேசுகையில், எழுத்தாளராகத் திரைப்படங்களில் இதுதான் எனக்கு முதல் படம். இதற்கு முன்பு நான் வெப்சீரிஸில் எழுதியிருக்கிறேன். அடல்ட் காமெடி என்றாலும் பார்க்கும் யாரும் முகம் சுழிக்கும்படியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக கதை எழுதியிருக்கிறோம். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நடிகை தனலட்சுமி பேசுகையில், படத்தில் என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு பெரிய வாய்ப்பு. என்னைப் பல பேர் ‘நக்கலைட்ஸ் மூலம் பார்த்திருப்பார்கள். காமெடி கதாபாத்திரத்தில் தான் இதுவரை நிறைய பேர் என்னைப் பாத்திருப்பீர்கள். ஆனால், இதில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் வளர்ந்திருக்கிறேன். சாவு என்பது எல்லோராலும் தவிர்க்க முடியாதது. அந்த யதார்த்தத்தை இந்த படம் சொல்லியிருக்கிறது என்றார்.
நடிகர் சுவாமிநாதன் பேசுகையில், இயக்குநர் சுந்தர்.சி எப்படி படத்தை ஜாலியாக எடுப்பாரோ அதேபோல இளங்கோவும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுப்பார். வைபவ், முனீஷ்காந்த், கிங்க்ஸி, பாலசேகரன், தனலட்சுமி, சுனில் என எல்லோரும் இயல்பாக சிறப்பாக நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். குடும்பத்துடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம் இது என்றார்.
நடிகர் கஜராஜ் பேசுகையில், எனக்கும் காமெடி வரும் என நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் ராமுக்கும் நன்றி. என் பையனும் நன்றாக நடித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். மக்கள் நீங்களும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் கருணாகரன் பேசுகையில், முதல்முறையாக எனக்கு ஒரு கதையை இயக்குநர் சொல்லவில்லை. தயாரிப்பாளர், நடிகர் வைபவ் என மற்றவர்கள்தான் கதை சொன்னார்கள். அருமையான படமாக வந்திருக்கிறது. தனலட்சுமி அம்மா, சுவாமிநாதன், சுனில், கிங்க்ஸ்லி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கிரேஸி மோகனின் அந்த டச் படத்தில் இருக்கும். ஜாலியான காமெடி படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் முனீஷ்காந்த் பேசுகையில், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருக்கும் நன்றி. கார்த்திக் சுப்புராஜிடம் அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தேன். அவர்தான் வைபவ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அடல்ட் படம் என்று இதை சொன்னாலும் கதையில் எந்த முகாந்திரமும் அதற்கானதாக இருக்காது. நல்ல படமாக வந்திருக்கிறது என்றார்.
நடிகர் கிங்க்ஸ்லி பேசுகையில், இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மீட்டரை மிஸ் செய்யாமல் சிறப்பாக நடிப்பார். கார்த்திக் சுப்புராஜின் அப்பாவுக்கும் நன்றி. தனலட்சுமி அக்கா, தீபா அக்கா இருவரும் படத்திற்கும் பெரும் பலம். சாந்தினி, நிஹாரிகா எல்லாரும் சூப்பர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
நடிகர் பால சரவணன் பேசுகையில், இந்தப் படத்தின் கதையை கேட்டதும் எப்படி படமாக்கப் போகிறார்கள் என்று ரொம்ப யோசித்தேன். அடல்ட் காமெடியை எல்லோரும் பார்க்கும்படி முகம் சுழிக்காத வண்ணம் படமாக்கியுள்ளார் இயக்குநர். இந்தப் படம் என் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும். வாய்ப்பு தந்த கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி. எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் இருக்கும். கார்த்திக் சுப்புராஜ் எல்லோருக்கும் ஃப்ரீடம் கொடுத்தார். ’பெருசு’ நின்னு பேசும் என்றார்.
நடிகை சாந்தினி பேசுகையில், இந்த வருடம் எனக்கு பெரிதாக அமைந்துள்ளது. மூன்றாவது படம் எனக்கு ரிலீஸ் ஆகிறது. சத்தியமாக இதுபோன்ற கதை இதற்கு முன்பு வந்தததில்லை. எப்படி இப்படி ஒரு கதையை இயக்குநர் யோசித்தார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் படம் வேலை பார்த்தபோது ஜாலியாக வேலை பார்த்தோம். அதற்கு முக்கியக் காரணம் நடிகர்கள்தான். ஷூட்டிங் முழுக்க சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள். எல்லா நடிகர்களும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டோம். தனலட்சுமி வேற லெவலில் நடித்துள்ளார். படத்தில் என்ன பெருசு என்பதை மார்ச் 14 அன்று திரையரங்கில் வந்து பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக குடும்பமாக வந்து பார்க்கலாம் என்றார்.
நடிகை நிஹாரிகா பேசுகையில், பாலாஜிக்கு முதலில் நன்றி. அவர்தான் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கார்த்திக் சுப்புராஜுடன் வேலை பார்த்தது எனக்கு பெருமை. நான் ஸ்கூல், காலேஜ் படித்த காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த நடிகர்களுடன் சேர்ந்து நான் நடித்திருப்பது மகிழ்ச்சி என்றார்.
விநியோகஸ்தகர் சக்திவேலன் பேசுகையில், இந்த வருடம் ‘பெருசு’ படத்துடன் ஸ்டோன் பெஞ்ச்சுக்கு பாசிட்டிவாக தொடங்கும். ‘பெருசு’ நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஸ்டோன் பெஞ்ச் மிகவும் விருப்பதுடன் படம் செய்யக்கூடியவர்கள். நல்ல சினிமாவை ரசிகர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது தனி உற்சாகம். ’பெருசு’ படம் தொடங்கும்போதே பெரிய ட்விஸ்ட் இருக்கும். அதிலே நான் ஷாக் ஆகிவிட்டேன். படம் எடுத்துக் கொண்ட கதை எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்காது. தனலட்சுமி அம்மா எல்லாம் நமக்கு இன்னொரு மனோரம்மா மாதிரி. இவங்களும் தீபாவும் செம காம்பினேஷன். எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றார்.
இயக்குநர் இளங்கோ ராம் பேசுகையில், படத்தை நல்லவிதமாக கொண்டு போய் சேர்க்க நல்ல பேனர் கொண்ட தயாரிப்பாளர்கள் முக்கியம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ போன்ற எண்பதுகளில் வந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல, குடும்பத்துடன் வந்து ஜாலியாக பார்க்கும்படியாக இந்தப் படம் இருக்கும். வைபவ்- சுனில் இந்த கதைக்கும் மிகப்பொருத்தமாக இருந்தார்கள். தனம், சுவாமிநாதன், கஜராஜ், தீபா என எல்லாரும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள். நல்ல டீம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.
நடிகர் வைபவ் பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கும்படியான சூப்பராக கதையாக வந்துள்ளது. மார்ச் 14 நீங்கள் திரையரங்கில் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். தனம் அம்மா நடிப்பில் பின்னியிருக்கிறார். கஜராஜ், ரெடின், முனீஷ்காந்த் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் செம ஜாலியாக சென்றது. உங்களைப் போலவே நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன். என் அண்ணன் கூட முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கிறேன் என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “னநானும் ராமும் அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் நல்ல படங்கள் வந்தால் என்னிடம் சொவ்லார். அப்படித்தான் ‘கூழாங்கல்’ படம் நாங்கள் பிரசண்ட் செய்வதாக இருந்தது. சில காரணங்களால் அது மிஸ் ஆனது. பின்பு ராம் சொன்ன படம் தான் இந்த ‘பெருசு’. மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். பாலாஜி சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நான்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். தனலட்சுமி சூப்பராக நடித்திருந்தார். சுவாமிநாதன், கருணா, கிங்க்ஸ்லி, முனீஷ்காந்த், சாந்தினி, நிஹாரிகா, சுனில் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றார்.

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ். எம். புக் ஆப் சினிமா […]
சினிமாஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ். எம். புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில், அனூப் ரத்னா தயாரித்துள்ளார். எஸ். எப். சி ஆட்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் நடிகருமான அனூப்ரத்னா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
அவர் பேசும் போது. தமிழில் இது எனக்கு முதல் மேடை. இங்கே வருகை புரிந்துள்ள கே ராஜன், பேரரசு ஆகியோருக்கு நன்றி. எங்களின் புதிய முயற்சிக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும்.
நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமா தான் எனது இலக்காக இருந்தது. நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம் என முடிவு செய்தேன். அதன் மூலம்
புதிய புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்களுக்கு, கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்துதான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.
முதலில் எந்த மாதிரியான படம் எடுப்பது என்று யோசித்தோம். பிறகு ஒரு ஆக்சன் த்ரில்லர் வகையிலான படம் எடுப்பதற்கு முடிவு செய்தோம். நமக்கு ஜாக்கிசானைத் தெரியும், ஜெட் லீ, சில்வஸ்டர் ஸ்டாலோன் எல்லாரையும் தெரியும். காரணம் அவர்கள் அனைவரும் ஆக்ஷன் ஹீரோஸ் என்று புகழ் பெற்றவர்கள். நம்மூரில் ரஜினி, சிரஞ்சீவி அனைவரையும் தெரியும். அவர்களும் ஆக்ஷன் ஹீரோவாகப் புகழ் பெற்றவர்கள் .
லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது. அதை நாம் கவனிக்காமல் விட்டால் அது கடித்து ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கூடவே இருப்பார்கள். ஒருவனுக்கு அருகே இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்று பார்த்தால் தெரியாது, ஆனால் ரத்தத்தை உறிஞ்சக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுதான் கதையின் அடிப்படையான ஆதார வரியாக இருக்கும். எங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்றார்.
சண்டை இயக்குநர் டேஞ்சர் மணி பேசும் போது, ஒரு படத்தில் ஆண்களுடன் ஆண்கள் சண்டை போடுவதை எடுப்பதாக இருந்தால் சுலபம். பெண்களுடன் பெண்கள் சண்டை போடுவதும் அப்படித்தான். ஆனால் இதில் ஆண்களும் பெண்களும் சண்டை போடுவது போல காட்சிகள் உண்டு. அதனால் சிரமப்பட்டு எடுத்தோம். எனக்கு மலையாளம் தெரியாத போதும் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை முடித்தோம். படக் குழுவினர் அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்றார்.
விநியோகஸ்தர் ஷிஜின்லால் பேசும் போது, இதை முதலில் மலையாளத்தில் மட்டும் எடுப்பதாக இருந்தது. நான் தான் சொன்னேன் இதைத் தமிழிலும், தெலுங்கிலும் கொண்டு வரலாம் என்று. ஏனென்றால் இங்கே உள்ள ரசிகர்கள் ஒரு படத்தில் நடித்திருக்கும் பெரும் நடிகர்களை மட்டும் பார்ப்பதில்லை. படம் எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள் என்று சொன்னேன். ஆனால் பிறகு பணிகளில் இறங்கியபோது தமிழ் மொழிக்கும் ஏற்றதாக இருந்தது. கேரளாவில் கதை மட்டும் முக்கியமாகப் பார்ப்பார்கள். அதை முன்னிட்டு சிக்கனமாக எடுப்பார்கள். ஆனால் இது எல்லோருக்கும் ஏற்ற மாதிரி ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும். படம் நன்றாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் கூறினேன். நம்பி வாங்க என்று கூறினேன். அனூப் மலையாளத்தில் சுமார் 20 படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பார். ஆரம்பத்தில் இதில் அவர் நடிப்பதாக இல்லை. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகராக மட்டும் இருந்தார். அவருக்கு ஏற்ற மாதிரி இருந்ததால் தான் இதில் வந்தார்.
இதில் நன்றாக நடித்துள்ளார். படமும் நன்றாக வந்துள்ளது என்றார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசும்போது, இந்தப் படத்தை அழகாக எடுத்திருக்கிறார்கள். இந்த விழாவில் கேரளாவில் இருந்து வந்திருந்த அவர்கள் தமிழ் பேசிய அழகே தனி. நான் இப்போது சொல்கிறேன் நீங்கள் பேசிய தமிழ் அழகு. கதாநாயகி கூட அழகாகத் தமிழ் பேசினார்.
கேரளாவில் இருந்து தமிழை நம்பி வந்திருக்கிறார்கள். தமிழையும், தமிழர்களையும் நம்பி வந்தால் எதுவும் தவறாகப் போகாது. தமிழர்கள், தான் கெட்டுப் போவார்களே தவிர அடுத்தவர்களை கெடுக்க மாட்டார்கள். வாழ வைப்பார்கள். படத்தின் பெயர் லீச் என்று உள்ளது. அப்படி என்றால் ரத்தம் உறிஞ்சும் அட்டை என்று பெயர். இன்று சமுதாயத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், கோடீஸ்வரர்கள் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். கோடீஸ்வரன் மேலும் கோடீஸ்வரனாக உயர்ந்து கொண்டே போகிறான். உலகத்தில் மூன்றாவது பணக்காரர் யார் என்று உங்களுக்கே தெரியும். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். திட்டமிட்டு ஒரு குடும்பத்தையே பணக்காரர் ஆக்கி கொண்டு வருகிறார்கள். ஏழைகள் எண்பது கோடி பேருக்கு 5 கிலோ அரிசி இனாம் என்கிறார்கள். ஏன் இனமாக, இலவசமாகப் போடுகிறீர்கள்? சுதந்திரமடைந்து 75 ஆண்டு காலமாகியும் ஏன் இலவசம் தரவேண்டும் ?
வேலைவாய்ப்பு இல்லை. அது இல்லாமல் சிரமப்படுகிறார்கள். வேலை வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டுமே தவிர இலவசம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் ஏழைகளாக இருப்பது, இந்தியாவில் இன்று பேசு பொருளாக இருக்கிறது. அதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நாம் வாழ்வோம் அடுத்தவர்களை வாழ வைப்போம்.
ஆன்மா மூன்று வகைப்படும்.
ஆத்மா, புண்ணிய ஆத்மா, மகாத்மா என்றும் மூன்று வகைப்படும். ஆத்மா நமக்குள்ளே இருக்கிறது. நாம் நன்றாக இருக்கவேண்டும், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்துப் பிழைத்து ஆத்மாவை காப்பாற்றுகிற வகை. இது சாதாரண ரகம். நாம் நன்றாக இருக்க வேண்டும் நாம் சம்பாதித்து மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் வகை அவன் புண்ணிய ஆத்மா. தன்னைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பிறர் வாழ வேண்டும் என்று மட்டும் நினைப்பவன் மகாத்மா. அப்படிப்பட்ட மகாத்மாக்கள் நாட்டில் சிலர்தான் உண்டு. மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அப்துல் கலாம் போன்றவர்கள் எல்லாம் மகாத்மாக்கள்.
இன்று தமிழ் சினிமா நொந்து போயிருக்கிறது, வெந்து கொண்டிருக்கிறது. இன்று சின்ன கம்பெனிகள் மட்டுமல்ல பெரிய கம்பெனிகளும் சிரமத்தில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகள். அவர்கள் தான் சம்பளத்தை உயர்த்தி உயர்த்தி சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டார்கள். எல்லாவற்றையும் விட கொடுமை என்ன தெரியுமா? தமிழ்த் திரையின் தலை மகன் தமிழ் சினிமாவின் அடையாளம் உலக நடிகர்களுக்கெல்லாம் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடகங்களில் நடித்து திரைப்படங்களில் புகழ்பெற்று உலக நடிகனாக உயர்ந்து காட்டிய அவர் அண்ணாவால் தென்னாட்டு மார்லன் பிராண்டா என்று பாராட்டப்பட்டவர். நடிப்பால் உலகத்தையே கவர்ந்த அந்த சிவாஜி கணேசனின் வீடு இன்று ஏலம் போவதற்கு தயாராகி விட்டது. ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்துள்ளது.
செய்தியைப் படித்த போது வருத்தமாக வேதனையாக இருந்தது. மூன்று கோடி கடன் வாங்கி பேரப்பிள்ளை படம் எடுத்ததில் வட்டி ஏறி 9 கோடி ஆகி உள்ளது. இன்று ஏலம் விடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. எனக்கு வருத்தமாக இருந்தது. முடிந்தவர்கள் உதவி செய்யலாம்.
பெரிய நடிகர்கள் பத்து பேர் சேர்ந்தால் இதைத் தீர்க்க முடியும். சிவாஜியால் கலைஞரா? கலைஞரால் சிவாஜியா ?என்கிற அளவுக்கு ஒருவரால் ஒருவர் புகழ் பெற்றனர். சிவாஜிக்கு நெருக்கமானவர் கலைஞர். அந்த குடும்பத்தில் இருந்து வந்த முதல்வர் ஏதாவது செய்யலாம். தமிழக அரசு இதில் ஏதாவது செய்யலாம். தமிழக கதாநாயகர்கள் உதவி செய்யலாம். அல்லது நடிகர் சங்கம் உதவி செய்து அந்த சிவாஜியின் வீட்டைக் காப்பாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்லவில்லை வேண்டுகோளாக வைக்கிறேன். இந்த லீச் பெரிய வெற்றி பெற்று மக்கள் மனதில் சென்று சேர வேண்டும். பெரிய படங்கள் தான் ஓடும் என்ற நிலை இல்லை. சின்ன படங்கள் சென்ற ஆண்டு வெளியானதில் 10 -12 படங்கள் வெற்றி பெற்றன. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.
அடுத்து இயக்குநர் பேரரசு பேசும்போது, இசைஞானி இளையராஜாவின் பாடல்களை கேட்போம் ரசிப்போம். கேட்கிறபோதும் ரசிக்கிறபோதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது. ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் கேட்பதற்கு மட்டும் தானா பாட்டு போடுகிறீர்கள் ? அதை நாங்கள் பாட வேண்டாமா?இல்லையென்றால் சொல்லிவிடுங்கள் என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று. படத்தில் இடம்பெறுவது, ஸ்டார் ஹோட்டல்களில், நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம். இங்கே அருமையாக நிஜாம் பாடினார். அவரது திறமை வெளிப்படுத்துவதற்கு இளையராஜா பயன்படுகிறார். அது ஒரு பாக்கியம் என்றே நினைக்க வேண்டும்.
ஆரம்பத்தில் எல்லா திரைப்படப் பாடல்களும் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் அடிப்படையாக வைத்து வெற்றி பெற்றன. பிறகு தான் தங்களது இசையை உள்ளே கொண்டு வருவார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி சந்தியாவாம். தமிழ்நாட்டுக்கு சந்தியாக்கள் மூன்று தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அம்மா ஒரு சந்தியா, காதல் படத்து சந்தியா ஒன்று, இப்போது மூன்றாவதாக இந்த சந்தியா வந்ந்திருக்கிறார். இன்று நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டைகளாகி வருகிறார்கள். நம்மிடம் ரத்தம் இருக்கும் வரை அட்டைப் பூச்சிகள் ரத்தத்தை உறிஞ்சுதற்கு இருக்கும். இதில் மூன்று பாடல்களுமே நன்றாக உள்ளன. இது மாதிரியான பாடல் வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. இப்போது வந்துள்ளது. அந்தாதி ராகத்தில் ஒரு பாடல் வந்துள்ளது. எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
இதில் படக்குழுவினர் முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து வந்துள்ளார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிவது பிழையில்லை. இங்கு இவ்வளவு பேர் மத்தியில அவர்கள் மலையாளத்தில் பேசியே புரியவைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 250 படங்களுக்கு மேல் நடித்தவர். பெரிய புகழ் பெற்றவர். தாத்தா 250 படங்களில் நடித்து சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தை எடுத்ததில் இழந்திருக்கிறார். அந்த வீடு ஜப்தி நடவடிக்கைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என்றால் நினைத்துப் பாருங்கள். ஒரு படம் எடுத்தால் ஒட்டுமொத்த சொத்தும் போய்விடுமா ?
இது சிவாஜி கணேசன் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் அல்ல. தமிழ் திரை உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஆகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஆபத்தில் இருக்கிறது சினிமா. இந்தச் செய்தியைப் பார்த்தால் யார் படம் எடுக்க வருவார்கள்?
அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும். நான் ஒரு செய்தியைப்படித்தேன். பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. முன்பணம் எதுவும் வாங்குவதில்லை. கதை பிடித்திருந்தால் நடிப்பார். அந்தப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை, லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுகிறார் என்று படித்தேன். என்ன ஒரு அருமையான திட்டம்! எப்படிப்பட்ட மனம் அவருக்கு! அந்த அளவுக்கு அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமாவும் அவரைக் கைவிடாது.
இப்படிப்பட்ட நிலை இங்கு வருமா? இந்த புதிய படக் குழுவினரின் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றார்.
முன்னதாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நிஜாம் பல குரல்களில் பேசி, திரைப்படப் பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் அரசியல் கட்சினருக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை முழுமையாக மீண்டும் படியுங்கள். அதில் […]
அரசியல் தமிழகம்திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லும் அரசியல் கட்சினருக்கு, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொண் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை முழுமையாக மீண்டும் படியுங்கள். அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது, ஏதாவது ஒரு விஷயத்தை இதை எதிர்த்து, இதற்காக என எந்த ஒரு அஜெண்டாவும் குறிப்பிடப்படவில்லை. அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசுக்கு எதிராக போராட தயாராக வேண்டிய சூழலை உருவாக்குவதற்காக கூட்டத்தை கூட்டுகிறார்கள்.
1962, 1967 அந்தக் காலகட்டங்களில் ஆட்சிக்கு வருவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தினார்களோ கடைப்பிடித்தார்களோ அதே தந்திரங்களை மீண்டும் கொண்டுவரக் கூடிய வகையில் எட்டு கோடி தமிழர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திணிப்பதற்காக, கிளர்ச்சியை ஏற்படுத்தவே அவர்கள் நடத்தக்கூடிய கூட்டமாகத்தான் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை பாரதி ஜனதா பார்க்கிறது என்றார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அகத்தியா”. கதைப்படி.. படப்பிடிப்பிற்காக கலை இயக்குநர் […]
விமர்சனம்வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், சார்லி, ரோகிணி, லாரா, இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், பா. விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அகத்தியா”.
கதைப்படி.. படப்பிடிப்பிற்காக கலை இயக்குநர் ஜீவா தனது நண்பர்களுடன், பாண்டிச்சேரியில் உள்ள பழைய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து, அமானுஷ்யங்கள் உள்ள பேய் பங்களாவாக வடிவமைக்கிறார். அப்போது ஆங்கிலேய காலத்து பியானோ மண்ணுக்குள் புதைந்த நிலையில் கிடைப்பதை பார்க்கின்றனர். அதை சேதமாகாமல் எடுத்து சுத்தம் செய்து வைத்ததோடு, அந்த பங்களாவை நிஜ பேய் பங்களாவாக மாற்றி விடுகிறார்கள். இதற்கிடையில் படப்பிடிப்பை ரத்து செய்வதாக தயாரிப்பாளர் ஜீவாவிடம் கூற ஒட்டுமொத்த குழுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
பின்னர் ராஷி கண்ணா ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக அந்த பேய் பங்களாவை பொதுமக்கள் பார்வைக்கு விட்டு, செலவு செய்த பணத்தை மீட்க முடிவு செய்கிறார்கள். அப்போது ராஷி கண்ணா அந்த பியானோவை வாசிக்க, அதிலுள்ள ரகசிய அறை திறக்கிறது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் ஜீவாவின் கண்களில் வந்து போகிறது. பின்னர் அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என தேடும்போது, பழங்கால படச்சுருல் ( பிலிம் ரோல் ), ஸ்டெதஸ் கோப், எழும்புக்கூடு போன்றவைகள் தென்பட, பிலிம் ரோலில் என்ன இருக்கிறது என பார்த்தபோது, 1940 ல் பாண்டிச்சேரி கவர்னராக இருந்த எட்வர்ட் என்பவரின் தங்கையை சித்த மருத்துவத்தில் அர்ஜூன் குணப்படுத்தியதாகவும், பின்னர் அவரைரையே திருமணம் செய்து கொண்டதாகவும் இருக்கிறது. மேலும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். எழும்பு புற்றுநோய்க்கும் மருந்தை தயார் செய்து வைத்துள்ளார். அதோடு அந்த பிலிம் ரோலில் கதை முடிகிறது.
இதற்கிடையில் ஜீவாவின் தாய் எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் அவதிப்படுகிறார். தாயை குணப்படுத்த சித்த மருத்துவர் கண்டுபிடித்த மருந்தை தேடி அந்த பேய் பங்களாவுக்கு ஜீவா செல்ல முற்படும்போது, ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளே விடாமல் தடுக்கிறது.
ஜீவா பேய் பங்களாவுக்குள் சென்று மருந்தை எடுக்க முடிந்ததா ? அவரது தாயார் என்னானார் என்பது மீதிக்கதை…
தற்போதைய சூழ்நிலையில் விதவிதமான நோய்கள் புதிது புதிதாக தோன்றுகிறது. ஆனால் ஆங்கில மருந்துகள் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இயற்கை மருத்துவம் தான் உதவுகிறது. சமீபத்தில் கொரோனா காலத்தில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட மருந்துகளை மக்கள் பயன்படுத்தியதை அனைவரும் அறிவோம். அதேபோல் தீராத நோய்களுக்கும் நமது முன்னோர்கள் மூலிகைகள் மூலம் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். உலகிற்கே தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இயக்குநர் பா. விஜய் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
அதேபோல் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் தத்ரூபமாக, அந்த காலகட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பேய் படத்தில் காமெடியிடன் ஃபேண்டஸி, த்ரில்லர் கலந்து ரசிக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார். பாடலாசிரியர் மட்டுமல்லாது, சிறந்த படைப்பாளி என நிரூபித்திருக்கிறார் பா. விஜய்.
அர்ஜீன் தோன்றும் காட்சியில் தான் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இந்த படத்தில் அர்ஜூன் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். தமிழர்களின் பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் மகத்துவத்தை பதிவு செய்த படத்தில், அடுத்த தலைமுறைக்கு பாடமாக அர்ஜூன் நடித்த காட்சிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் நடிகர் ஜீவாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சார்லி, ரோகிணி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ரோகிணி இந்த படத்திற்காக மொட்டை அடித்து நிஜமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி போல் நடித்து, அந்த கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.