ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி […]
சினிமாவிடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக […]
சினிமாலஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி’ & ‘வீனஸ் என்டர்டெய்னர்ஸ்’ சார்பில் ஜி.மனோகரன் & கே.பி. ஸ்ரீகாந்த் தயாரிப்பில், நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் […]
சினிமாமிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி […]
சினிமாமிக மிக அவசரம், மாநாடு படங்களின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கவிஞரும் எழுத்தாளருமான ஆண்டாள் பிரியதர்ஷினி பேசும்போது, இந்த படத்தில் எனக்கு நீதிபதி கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்த தம்பி ராமையாவுக்கு நன்றி. ஆறடி உயரம் உள்ள உமாபதி ராமையா தன் தந்தையை விட 60 அடி தாண்டுவார் என்று இப்போது நாம் பார்த்த காட்சிகளே காட்டுகின்றன. மிக மிக அவசரம் போன்ற பெண் காவலர்களின் நுணுக்கமான பிரச்சனைகளை பேசிய படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இந்த சமூகத்தின் மீதான அக்கறையை குறிப்பாக பெண்களின் மீதான அக்கறையை நான் கவனித்தேன் என்றார்.
இயக்குநர் உமாபதி ராமையா பேசும்போது, “இந்த படத்திற்கு இயக்குநராக நான் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லலாம். சுரேஷ் காமாட்சியை பொருத்தவரை திறமையானவர்களை சரியாக தேர்ந்தெடுப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற ஆரம்பித்த சமயத்தில் தான் சுரேஷ் காமாட்சி என்னை அழைத்து தன்னம்பிக்கை அளித்து இயக்குநராக ஆக்கினார். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்குமே தனித்தனியாக ஒரு பாடி லாங்குவேஜை உருவாக்கி கொடுத்து விட்டார். அதனால் எனக்கு படப்பிடிப்பில் எளிதாக இருந்தது. கிட்டத்தட்ட 80 சதவீதம் அவர் பண்ணிவிட்டார். ஆனால் திரைக்கதையில் அப்பா, சுரேஷ் காமாட்சி இருவரும் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.
சமுத்திரக்கனி அண்ணனுக்கும் எனக்கும் இருப்பது ரொம்ப வித்தியாசமான ஒரு பிணைப்பு. என் அப்பா அவரை தம்பி என்று அழைப்பார் நான் அவரை அண்ணன் என்று அழைப்பேன். என் திருமணம் முதற்கொண்டு எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் எனக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியை படமாக்கிய போது மீண்டும் ஒரு டேக் எடுக்க கேட்கலாமா என தயங்கினேன். ஆனால் சமுத்திரக்கனி அண்ணன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அனைவரையும் தயார்படுத்தி அந்த காட்சியை அற்புதமாக நடித்துக் கொடுத்தார். மற்ற நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பை அழகாக ஏற்படுத்திக் கொடுப்பார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே ஒரு புது இயக்குநராக எனக்கு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்த படத்தில் அப்பாவை வித்தியாசமான மனிதராக பார்ப்பீர்கள். எல்லோருக்கும் அப்பாதான் ஹீரோ என்பார்கள். என் படத்திலேயே அப்பாதான் ஹீரோ எனும் போது அவரை வைத்து கொஞ்சம் ஏதாவது புதுசாக செய்ய ஆசைப்படுவது இயல்பு தானே. சின்ன முள்ளு பாடலில் என் தந்தைக்கு ஒஸ்தியில். சிம்பு ஆடிய நடன அசைவுகளை தான் முயற்சி செய்தோம். ஆனால் அவர் புதிதாக ஒன்று செய்தார். காலை விரித்து நடனம் ஆடுவதற்காக தரையில் எண்ணெய் எல்லாம் ஊற்றி அவரை ஆட வைத்தோம். அடுத்து அவரே எங்கே எண்ணெய் கொண்டு வாருங்கள் எனக் கேட்க ஆரம்பித்து விட்டார். நல்ல படம் கொடுத்து இருக்கிறோம். இதயத்தில் இருந்து எடுத்துச் செல்வது போல ஒரு நல்ல கருத்தையும் இதில் சொல்லி இருக்கிறோம் என்று கூறினார்.
கதையின் நாயகன் தம்பி ராமையா பேசும்போது, எனது மகன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எம்ஜிஆர் ஆகவும் ஆர்.எம் வீரப்பனாகவும் என எல்லாமாக வந்திருக்கும் சத்யஜோதி தியாகராஜனுக்கு நன்றி. நான் சந்தித்த பல தொழிலதிபர்களிடம் உரையாடிய போது மனிதரில் புனிதராக இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆத்மா அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒட்டுமொத்த ரகசியத்தை ஒரு பச்சை குழந்தை போல என்னிடம் கொட்டி தீர்த்தார். அதை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டுமே என நினைத்தபோது அதற்கு எனக்கு உருவம் கொடுத்தது என்றால் சமுத்திரக்கனி தான். சினிமாவில் பல பேர் என்னை பயன்படுத்துவார்கள். பயணம் செய்வார்கள். ஆனால் சமுத்திரக்கனி மட்டும்தான் என்னை பயன்படுத்தி பயணம் செய்து பக்கத்திலும் இருப்பவர். என் வீட்டில் யாராவது ஏதாவது என்னை சொன்னால் கூட என் தம்பி சமுத்திரக்கனி இருக்கிறான். அவனிடம் சென்று விடுவேன் என்று கூறி தான் அனைவரையும் மிரட்டி வருகிறேன்.
நான் குணச்சித்திர நடிகர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வினோதய சித்தம் என்கிற படத்தை எனக்காகவே உருவாக்கி, போகிற, வருகிற இடங்களில் எல்லாம் என்னை கொண்டாட வைத்தார். அவர் என்னை வைத்து வினோதய சித்தம் என்கிற படத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ராஜா கிளியை என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எல்லா நேரத்திலும் பசிக்கு அடுத்தவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? நமக்கு தேவையான போது நாமும் சமைக்க வேண்டும் தானே ? அப்படி தான் இந்த கதையை சமைத்தேன்.
உயரத்தில் இருக்கும் பல பேர் இன்று துயரத்தில் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கதை எதையும் உணர்த்தாது. உணர வைக்க செய்யும். படத்தின் கதையை உருவாக்கியபோது நான் தான் இதை இயக்குவேன் என சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால் நானே நடித்துக் கொண்டு இயக்குநராக இருப்பது சரி வருமா என நினைத்து உமாபதியை இந்த படத்தை இயக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். உடனே சுரேஷ் காமாட்சி அவரை அழைத்து நீ தான் படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குநராக கொண்டு வந்திருக்கிறார்.
ஐஸ்வர்யா எங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தது காலம் எங்களுக்கு கொடுத்த கொடை. புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு ஆறேழு மொழிகளில் பேசக்கூடிய வல்லமை கொண்டவர் அவர். சீதா பயணம் என்கிற பிரமாண்ட படைப்பை தனது மகளுக்காக அர்ஜுன் எடுத்திருக்கிறார். இந்த ராஜா கிளி திரைப்படம் ஒரு கூண்டுக்கிளியாக இருந்தது. இப்போது வெளியே வந்து பறக்க இருக்கிறது. சத்யஜோதி தியாகராஜன் சொன்னது போல, அது தங்க கிளியாக வெளிவர பிரார்த்தனை செய்து கொள்கிறேன். எனக்கும் அரவிந்தசாமிக்கும் என்ன பெரிய வயது வித்தியாசம் ? ஆனால் அவருக்கு தந்தையாக நடிக்கும் தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. அதேபோல இந்த படத்தில் என்னுடன் நடித்த கதாநாயகிகளும் அது போன்ற தன்னம்பிக்கையுடன் தான் நடித்தார்கள் என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, தம்பி உமாபதி சுய ஒழுக்கம் உள்ள ஒரு இளைஞர். அவருக்கு ஒரு காதல் இருந்தது என்பதெல்லாம் அப்புறம்தான் எனக்கு தெரியவந்தது. ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து அது ஐஸ்வர்யா தான் என கண்டுபிடித்து விட்டேன். இந்த படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பிற்காக கிளம்பி சென்றார்கள். அப்போது நான் கவனித்த விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்கான ஆய்வுகளை எல்லாம் செய்தது உமாபதி தான். அதன் பிறகு தான் தம்பி ராமையா அண்ணனை அழைத்து நீங்கள் நடிக்கிறீர்கள், பாட்டு எழுதுகிறீர்கள், இசையும் அமைக்கிறீர்கள்.. அதனால் உமாபதி டைரக்ட் பண்ணட்டுமே என்று கூறினேன். அதை பெருந்தன்மையாக அவர் எடுத்துக் கொண்டார்.
இந்த படம் தான் உமாபதிக்கு உச்சம் என சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு படம். ஆனால் அவரிடம் இன்னும் அதிக படைப்புத் திறமை ஒளிந்திருக்கிறது. அதற்கான படம் நிச்சயமாக அடுத்து அமையும் என நம்புகிறேன். மாநாடு படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டிடம் உதவியாளராக பணியாற்றிய கேதரின் சுறுசுறுப்பும் திறமையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. உமாபதியின் வயசுக்கு அவர் சரியாக செட்டாவார் என முடிவு செய்து அவர்கள் இருவரையும் இணைத்து விட்டேன். இயக்குனர் மணிவண்ணன், ராம் ஆகியோருக்கு அடுத்ததாக நான் வியந்தது தம்பி ராமையாவை பார்த்து தான். ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொள்ளவே மாட்டார். வசனம் அது பாட்டுக்கு கொட்டும். அது அவரே எழுதியதால் மனதில் ஊறி போய்விட்டது.
மாநாடு சமயத்தில் எனக்கு போன் செய்து வாழ்த்தியது இரண்டு நடிகர்கள் மட்டுமே ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்னொருவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதன் பிறகு சோசியல் மீடியாக்களில் கூட அவரை சமூக கருத்து சமுத்திரக்கனி என்று சொல்வதை பார்த்திருக்கிறேன் எல்லோராலும் அப்படி கருத்து சொல்லி விட முடியாது. கருத்து சொல்வதற்கு என்று ஒரு தனித்தன்மை வேண்டும். மிஸ்கின் சமுத்திரக்கனி இருவருமே உள்ளுக்குள் ஒரு குழந்தை மாதிரி. சமீபத்தில் என்னை கவர்ந்த இருவர் இவர்கள்தான். தம்பி ராமையா தான் கதாநாயகன் என தெரிந்தும் நடிக்க ஒப்புக்கொண்ட சுவேதா, சுபா இருவருக்கும் நன்றி. எப்போதும் ஸ்கிரிப்ட்டை தான் நம்பி நடிக்க வேண்டும்.
நம் பக்கத்தில் இருப்பவர்களின் அருமை நமக்கு பெரும்பாலும் தெரியாது. அப்படித்தான் என் அலுவலகத்தில் பணி புரியும் பிரவீன் இவ்வளவு நடிப்பான் என தெரியாது. நம் கூட இருப்பவர்கள் அடுத்த லெவலுக்கு வளரும் போது அதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. என்னுடைய அன்பு தம்பி கிரிஷ்ஷை அருமையான பாடகராக பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் ஒரு அற்புதமான நடிகராக மாறி இருக்கிறார். ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக அவரை பார்ப்பீர்கள். அவரது மனைவி சங்கீதாவிடம் இவர் சிறப்பாக நடித்திருப்பதாக சொன்னால் நம்பவே மாட்டேன் என்றார். படம் எடுப்பது மட்டுமே எங்களது வேலை. அது நல்ல படமா இல்லையா என்பதை அதன் வெற்றி மட்டும் தான் தீர்மானிக்கிறது. அதன் பட்ஜெட் தீர்மானிக்காது. இந்த படம் ஒரு மனிதனின் வாழ்வியல். இது மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். இந்த படத்தை நவ-29ல் தான் வெளியிடலாம் என இருந்தோம். ஆனால் புஷ்பா 2 ரிலீஸ் காரணமாக இப்போது டிசம்பர் 13ல் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
இயக்குனர் சமுத்திரக்கனி பேசும்போது, நான் வினோதய சித்தம் படம் பண்ணிவிட்டு உங்களிடம் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன் யாருக்கு எதை தரணும் எந்த சூழ்நிலையில் கொடுக்கணும் என்பதை காலம்தான் முடிவு செய்யும். கடந்த ஒரு வாரமாக பயணங்களில் இருக்கும் போது பிளைட் தாமதமாகவே இருந்தது. ஆனால் இன்று மட்டும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது, சரியான நேரத்திற்கு சென்று விட வேண்டும் என நான் வேண்டிக் கொண்டேன். அதேபோல இன்று சரியான நேரத்திற்கு பிளைட் கிளம்பிவிட்டது, எல்லாமே காலம் முடிவு செய்வது தான். இதை நான் மிகவும் நம்புகிறேன்.
ஒரு இயக்குனரின் மூன்று படங்களை பார்த்தால் போதும். அந்த இயக்குனரின் கேரக்டர் என்னவென்று தெரிந்து விடும் என சொல்வார்கள். அது இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும் என நான் நினைக்கிறேன். அப்படித்தான் தம்பி சுரேஷ் காமாட்சியை நான் பார்க்கிறேன். அவரது படங்களே சொல்லும் அவர் யார் என்று. இந்த சினிமா இருக்கும் வரை அவரது வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும். எந்த கதை எழுதினாலும் அண்ணன் தம்பி ராமையாவை வைத்து தான் எழுதுவேன், இப்போது கூட அவரை வைத்து தான் ஒரு கதை எழுதி முடித்து இருக்கிறேன். இருவரும் சந்தித்தால் கதைகள் மட்டும்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில் நமக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமா மூலமாக இந்த சமூகத்திற்கு ஏதாவது சொல்வோம் என்று நினைப்போம். எனக்கு அவ்வளவாக தெரியாது என்று சொல்பவன் தப்பித்துக் கொள்வான். எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்பவன் தான் மாட்டிக் கொள்வான். நான் இப்போது வரை யாராவது என்னை கைப்பிடித்து அழைத்துச் செல்வார்கள் அவர்களுடன் சென்று விடலாம் என்று தான் இருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணனிடம் அரசியல், சினிமா, இலக்கியம் என எந்த டாபிக் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவரை ஒரு நூலகமாகத்தான் நான் பார்க்கிறேன். உமாபதியுடன் ஒரு படம் நான் நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன் என்று உமாபதி சொன்னபோது நான் கூட வேண்டாம் என்று சொன்னேன். தன்னம்பிக்கையுடன் நானே நடிக்கிறேன் என நடித்தார். நடிப்பு, பாட்டு, டான்ஸ் என எல்லா தகுதியுமே இருக்கும் அவருக்கு ஒரு சரியான கதவு திறக்கவில்லையே என்று நான் நினைத்தேன். முதல் கதவு அர்ஜுன் சார் மூலமாக திறந்தது. இப்போது இயக்குநராக இரண்டாவது கதவு திறந்துள்ளது. அவரது உழைப்புக்கும் ஒழுக்கத்திற்கும் இன்னும் பெரிய பெரிய தளங்களில் வந்து நிற்பார். கூடவே நானும் நிற்பேன்.
நானும் தம்பி ராமையாவும் பேசிய பல கதைகளில் ஒன்று தான் இந்த ராஜா கிளி. காலம் ஒரு மனிதனை எங்கே எல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் காலத்திடமிருந்து பதில் சொல்லாமல் இந்த உலகத்தில் இருந்து யாரும் தப்பித்துப் போய்விடவே முடியாது. அதனால் முடிந்தவரை உண்மையாக இருங்கள். எளிமையாக இருந்து விடுங்கள். காலம் நம்மை கைபிடித்து தூக்கி செல்லும் என்பது தான் இந்த படத்தின் கதை என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது, இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். என்னுடைய குடும்ப படம் போல தான் இருக்கிறது. ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ. மாப்பிள்ளை டைரக்டர். நான் கூட இதுவரை நடிக்காத அளவிற்கு ஒரு ரொமாண்டிக் பாடலில் ராமையா நடித்து இருப்பதாக சொன்னார்கள். இது சரியில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்ட அவர்களது அனுபவங்களே எனக்கு ஒரு படம் பார்ப்பது போல இருந்தது. நானும் எனது மாப்பிள்ளையும் ஒன்றாக இருக்கும் முதல் மேடை இது. இனி நிறைய பார்க்கப் போகிறீர்கள். எங்கள் கூட்டணியில் பல படங்களை உருவாக்கப் போகிறோம். சொல்லக்கூடாது செய்து காட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி நல்ல நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வரை என்னை அவர் கூப்பிடவே இல்லையே. அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன் என்று கூறினார்
7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ […]
சினிமா7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர்- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, இங்கே வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் சேர்ந்த போது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான். பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தான். மணி சார் தாங்க முடியாமல், டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா என்று சொன்னார். இங்கே வந்தும் பார்க்கிறேன். அதே வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் லைட்டை திருப்புங்க. கதவை மூடுங்க என. டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா என (சித்தார்த்தை பார்த்து கூறுகிறார்).
என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த அந்த சமயத்தில் தான் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள். சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது, அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பென்ச் தான் போல இருக்கிறதே. இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே. நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது. சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, நிறைய படிக்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் கத்துக்கிட்டேன் என்று சொல்லலாம்.
இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’. ‘மிஸ் யூ’. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக எடுத்து, ஒரு லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து நான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இது இருக்கிறது.
எனக்கு விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் தினேஷ் நடன வடிவமைப்பில் சித்தார்த் நன்றாகவே ஆடி இருந்தார். பாடல்கள் நன்றாக இருந்தது. பார்ப்பதற்கு நான் படித்த காலத்தில் இருப்பது போன்று சிம்பிளாக இருந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாமல் சித்தார்த் ஒத்துக் கொள்ள மாட்டார்.
இந்த படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் அவ்வளவு திறமையுடன் மொழி தெரியாவிட்டாலும் சின்சியராக இருக்கிறார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் குறும்படம் பார்த்ததிலிருந்து பாலசரவணனை பார்த்து யார் அந்த பையன், இப்படி பின்னுகிறானே என யோசித்து இருக்கிறேன். அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவது ரொம்பவே கஷ்டமான விஷயம். கொஞ்சம் மீறினாலும் கொட்டாவி விட்டு விடுவார்கள். அப்பாவித்தனத்துடன் சேர்ந்து நகைச்சுவையையும் வெளிப்படுத்தியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
அதன் பிறகு லப்பர் பந்து என அவர் நடித்த படங்களில் எல்லாம் எல்லா பஞ்ச்சுகளும் சரியான விதத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும். பாலசரவணன் உங்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. நாம சீக்கிரம் ஒண்ணா ஒர்க் பண்ணுவோம். பசங்க கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நிச்சயமாக அது நடக்கும் என நம்புகிறேன்.
நானும் கருணாவும் இப்போதுதான் வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்து வந்தோம். அவ்வளவு அழகாக காமெடி வசனங்களை டெலிவரி பண்ணுகிறார். நான் எதுவுமே கத்துக்காமல் சினிமாவுக்கு வந்து, இங்கே தான் கத்துக்கிட்டேன். ஆனால் இன்று எல்லோரும் ஷார்ட் பிலிமில் அசத்துகிறார்கள். வரும்போதே தயாராகி வருகிறார்கள். ஜிப்ரான் நாம் இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம். இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும். அதை புரமோட் செய்த விதமாகட்டும். அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது. சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது என்று கூறினார்.
நாயகன் சித்தார்த் பேசும்போது,
இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது. செய்திகளுக்கு வைக்கப்படும் புகைப்படங்கள், டைட்டில்கள், நிகழ்ச்சியின் ஹைலைட்டுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்கள் தான் வேகமாக பரவுகிறது.
அப்படி ஒரு விஷயத்தை தேட ஆரம்பித்தால் நமக்கே திடீரென ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகிறது என தோன்றும். அதனால் நான் பாசிடிவையே தேடி போக வேண்டும். ‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, வன்மம் என எதுவுமே இல்லாத ஒரு பாசிட்டிவான ஃபீல் குட் படம். 90களில் விஜய் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்த காலத்தில் எல்லா படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும். நல்ல ஒரு பாசிட்டிவான சோசியல் கருத்தையோ, நகைச்சுவை கருத்தையோ, நட்பு, காதல் என நல்ல குணங்களை பற்றி உயர்த்திக் காட்டப்படுகின்ற வகையில் எடுக்கப்பட்ட கமர்சியல் படங்களை தான் நாங்கள் பார்த்து இங்கே வந்திருக்கிறோம்.
இந்த 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் இவற்றில் பெரிதாக எனக்கு வித்தியாசம் தெரியாது, எனக்கு ஐபோன்-14-க்கும் ஐபோன்-16க்குமே வித்தியாசம் தெரியாது. இந்த படத்தில் 90ஸ் கிட்ஸ் தான் கேரக்டர்களாக இருப்பார்கள். இந்த படத்தின் கதையை சொல்வதற்காக இயக்குனர் ராஜசேகர் வந்தபோது காதல் கதை என்றதுமே, தயவு செய்து வேண்டாம். பத்து வருடமாக அந்த பக்கமே நான் தலை வைத்து படுக்கவில்லை என்றேன். காரணம் தெலுங்கில் அதுபோல நிறைய பண்ணி வேறு எந்த படங்களும் எனக்கு வராமல் போய் எதற்கெடுத்தாலும். காதல் கதைகள் மட்டுமே வந்தது. என்னால் அது மட்டும் தான் பண்ண முடியும் என்கிற ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டார்கள். லெட்டர் கூட எழுதி வைக்காமல் அப்போது காதலை விட்டு ஓடி வந்தவன் தான். இன்னும் அந்த பக்கம் போகவே இல்லை. காதலில் சொதப்புவது எப்படி தான், நான் கடைசியாக நடித்த முழுக்க முழுக்க காமெடி ரொமான்ஸ் படம். அது கூட நான் முதலில் தயாரித்த படம் என்பதால். அதற்குப் பிறகு வேறு எதுவும் பண்ணவில்லை.
சரி கதை சொல்லுங்கள் எப்படியும் நோ தான் சொல்லப்போகிறேன் என்றேன். அவர் எடுத்ததுமே உலகத்திலேயே உங்களுக்கு பிடிக்காத ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல போகிறீர்கள் என்றார். இதை கேட்டதும் சரி என ஒப்புக் கொண்டாலும் அவரிடம் நீங்களும் நானும் பார்க்காத ஒரு காதல் படமாக இதை எடுப்போம். ஏற்கனவே அரைத்த மாவையே அரைக்க நாம் இருவருமே தேவையில்லையே என்று கூறிவிட்டேன். அப்படி எடுத்தால் தான் இந்த காலத்து பசங்க கிரிஞ்ச் என சொல்லாமல் இருப்பார்கள்.
கடந்த பத்து வருடங்களில் நிறைய லவ் படங்கள் ஜெயித்து இருக்கின்றன. அதனால் இதை எடுத்தோமா என்றால் இல்லை. இது கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். காதல் கதைகளுக்கு காலம் தாண்டிய ஒரு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். எனக்கும் அது தெரியும். நான் தெலுங்கில் நடித்த போது என்னுடைய காதல் படங்களை பார்த்த ரசிகைகள் இன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் என்னை பார்க்கும்போது நீங்கள் ஏன் காதல் படத்தில் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், நாங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு நல்ல பையனை செலக்ட் பண்ணி திருமணம் செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதில் உங்களுடைய தூண்டுதலும் பங்களிப்பும் இருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே நீங்கள் நல்ல பசங்க, அவர்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசி இரண்டு பேர் எதற்காக லவ் பண்ண வேண்டும் ஒரு பெண்ணிற்கு ஒரு பையனை ஏன் பிடிக்க வேண்டும் என்கிற காரணங்களை ரொம்பவே நியாயமாக சொல்லி இருப்பீர்கள். நாங்கள் எங்கள் பையன்களை கூட உங்களது படங்களை காட்டித்தான் வளர்க்கிறோம் என்றார்கள்.
சொல்லப்போனால் எல்லா ஜேனர் கதைகளையுமே மீண்டும் திரும்ப ஒருமுறை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அடுத்து வரப்போகும் புதிய தலைமுறை இளைஞர்களுக்கு காதல் என்றால் என்ன, நாம் ரசித்த விஷயங்கள் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளும் விதமாக நாம் காட்ட வேண்டும். இது எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். ரியாலிட்டி சம்பந்தப்பட்ட விஷயமாகவும் அதே சமயம் சினிமாவுக்கான அழகு இரண்டுமே இதில் இருக்கும். அதனால் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை தைரியமாக வெளியிட இருக்கிறார்கள்.
கார்த்தியை பற்றி இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சர்தார் 2 நைட் ஷூட்டிங் வைத்துக் கொண்டு எனக்காக இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தான். மணி சார் படத்தில் நாங்கள் இருந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொன்னவன் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டான். அப்போது நான் கார்த்தியிடம் நீயும் என்னை போல ஒரு நடிகனாகத்தானே ஆகப்போகிறாய் என்று கேட்டேன். ஆனால் அதற்கு கார்த்தி நானெல்லாம் உன்னை மாதிரி இல்ல மச்சி, நான் டைரக்ஷனில் தான் போகஸ் ஆக இருக்கிறேன். நான் பண்ணினால் டைரக்சன் தான் என்று சொன்னான். ஆனால் கொஞ்ச நாளிலேயே பருத்தி வீரன் பட அறிவிப்பு வருகிறது. அப்போது நான் போன் பண்ணினால் எடுக்கவே பயந்தான். அதன் பிறகு ஏதோ சொல்லி சமாளித்தான். இந்த நட்பு இப்போது வரை தொடர்கிறது.
நான் சமீப காலத்தில் பார்த்த ரொம்ப ரொம்ப பாசிட்டிவான படம் ‘மெய்யழகன்’. அந்த மாதிரி ஒரு படத்தை ஒப்புக்கொண்டு கமர்சியல் ஹீரோவான கார்த்தி அதில் நடித்து வெளிவந்தது உண்மையிலேயே ஹேட்ஸ் ஆப் கார்த்தி. படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் அழுதபடி கார்த்தியிடம் உணர்ச்சிகளை கொட்டினேன். அதை கார்த்தியும் ரொம்பவே ரசித்து கேட்டான்.
இந்த படத்தின் டிரைலரை கார்த்தி வெளியிடுவதன் மூலம் ரசிகர்களிடம் ஒரு பாசிட்டிவான அதிர்வுகளை கொண்டு செல்ல முடியும் என்பதால் தான் இதை ‘மெய்யழகன்’ தான் வெளியிட வேண்டும் என அழைத்தேன். சித்தா என்கிற படத்தை நான் எடுத்து முடித்து பொதுமக்களின் ஆதரவுடன் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் எடுப்பதற்கு எனக்கு இரண்டு வருடம் ஆனது. அந்த படத்தின் கதை மீதான நம்பிக்கை வைத்து அதை உணர்ந்து அந்த சமயத்தில் நான் கொஞ்சம் சீரியசான ஒரு இடத்தில் இருந்தேன். அடுத்து நான் கேட்கும் கதை ஜாலியாக இருந்தால் நன்றாக இருக்கும். சந்தோசமாக சிரித்துக் கொண்டு சூட்டிங் போய் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த ‘மிஸ் யூ’ படத்தின் படப்பிடிப்பு தளம் ரொம்பவே கலகலப்பாக இருந்தது.
கருணாகரனும் நானும் ஜிகர்தண்டா படத்தில் இருந்து நண்பர்களாக ஊறி விட்டோம். எல்லா விஷயத்திலும் தான். கருணாகரனிடம் எனக்கு பிடித்தது அவருடைய குரல். இந்த படத்தில் நண்பன் என்றால் இப்படி கூட இருப்பார்களா என்று நினைக்கும் அளவிற்கு அவர் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த படத்தை மூன்று தலைமுறையை சேர்ந்த குடும்பத்தினர் போய் பார்த்தாலும் அவர்கள் மூவருக்குமே இந்த படம் தொடர்பு படுத்தி பார்க்கக் கூடியதாக இருக்கும். சஷ்டிகா இந்த படத்தில் தோழியாக நடித்துள்ளார். எங்க பிரெண்ட்ஸ் குரூப்பிலேயே அதிகம் படித்த புத்திசாலி டாக்டர் கதாபாத்திரம் அவருடையது தான். பால சரவணன், சஷ்டிகா இருவரும் செட்டில் அடிக்கும் லுட்டிகள் காமெடி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். படத்திலும் அதே எனர்ஜியை கொண்டு வந்திருக்கிறார்கள். பால சரவணன் ஒரு அற்புதமான நடிகர். லப்பர் பந்து படத்தில் அவர்கள் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்தது.
இப்போது இங்கே அமர்ந்திருக்கும் இந்தப்படத்தின் நடிகர்கள் 20 வருடம் கழித்தும் தமிழ் சினிமாவில் நல்ல நகைச்சுவை நடிகர்கள், நல்ல குணச்சித்திர நடிகர்கள் என்கிற பெயரோடு இருப்பார்கள். நான் இப்போது சொன்ன விஷயங்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு காரணங்களாக இருந்தாலும் இரண்டாவது முறை இந்த படத்தை பார்ப்பதற்கு ஆவலாக தூண்டும் நபராக நிச்சயமாக கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் தான் காரணமாக இருப்பார். சுப்புலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு லவ் ஸ்டோரி ஒழுங்காக ஒர்க் பண்ண வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஹீரோயின் செலக்சன் சரியாக இருக்க வேண்டும். அவர்கள் நடிப்பு சரியாக இருக்க வேண்டும். அப்படி அழகான ஹீரோயின் அழகாக நடித்து விட்டால் அந்த லவ் ஸ்டோரி தானாகவே ஜெயித்து விடும். படத்தில் நாங்கள் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் ஏங்குவார்கள் என்கிற விதமாகத்தான் நாங்கள் நடித்து இருக்கிறோம்.
ஆஷிகா தமிழில் இடைவெளி விடாமல் படம் பண்ண வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் சின்ன வயதில் இருந்தே நான் உங்களுடைய ரசிகை என்று சொல்லி என்னை அடிக்கடி கிண்டலடித்து கொண்டே இருப்பார். இப்படி ஒரு ரசிகையுடன் நடிப்பது இதுதான் எனக்கு முதல் தடவை. அப்படி ஒரு ரசிகை பக்கத்தில் இருப்பது நல்லது தான். நமக்கு ஆலோசனைகள் சொல்வதற்கு உதவியாக இருக்கும். அடுத்த படத்தில் என்னுடன் 3 பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என பிராமிஸ் வாங்கி இருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அது மறுக்கவே முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து பீச்சில் ஜாலியாக ஸ்வீட் காரம் காபி சாப்பிட்டுவிட்டு அந்த இரவு நிம்மதியாக தூங்கினால் உங்களுக்கு எப்படி இருக்குமோ அந்த ஒரு உணர்வை இந்த படம் நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும் என்று கூறினார்.
நடிகர் கருணாகரன் பேசும்போது,
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே வந்த கார்த்திக்கு நன்றி. அவருடைய ‘மெய்யழகன்’ படம் திரும்பத் திரும்ப பார்த்தேன். ஒரு படம் முழுவதும் ரொம்பவே அப்பாவியாக நடிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம். அற்புதமாக நடித்திருந்தார் கார்த்தி. இந்த மிஸ் யூ படம் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். ஜிகர்தண்டாவுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சித்தார்த்துடன் எனக்கு ஒரு ஜாலியான நண்பன் கதாபாத்திரம். காதலுக்கு நண்பர்கள் தேவை. ஆனால் சில நேரம் ஏன்டா இப்படி என்கிற மாதிரி சில நண்பர்கள் இருப்பார்கள். நான் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் ஆஷிகா மட்டும்தான் ரொம்பவே சின்சியராக வேலை பார்ப்பார். நாங்கள் கூட அவ்வப்போது ஓபி அடித்து விடுவோம் இவர்களுடன். மாறன், சஷ்டிகா, பால சரவணன் என டீமாக வேலை பார்த்தது மகிழ்ச்சி என்றார்.
நடிகர் பால சரவணன் பேசும்போது, கனா காணும் காலங்கள், ராஜா மந்திரி காலத்தில் இருந்தே இயக்குநர் ராஜசேகரன் என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பார். அப்படி ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார். அதன் பிறகு தற்போது ‘மிஸ் யூ’ படத்தில் ரொம்ப ரொம்ப சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். தான் ஏதாவது ஒரு கதைக்கான ஒன்லைன் பிடித்து விட்டால் கூட என்னிடம் போனில் பேசி பகிர்ந்து கொள்வார். சித்தார்த் நடித்த படங்களில் ஜிகர்தண்டா எனக்கு ரொம்ப பிடித்த படம். நானும் மதுரைக்காரன் என்பதால். அதில் கருணாகரன் நடித்த ஊர்ணி கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஏக்கமாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கலாமே என்று. ஸ்பாட்டில் அந்த அளவிற்கு நன்றாக கவனித்துக் கொண்டார் சித்தார்த். ஒருநாள் பசிக்கிறது என்று சொல்லிவிட்டேன். ஒரு மணி நேரத்தில் பல ஐட்டங்களை கொண்டு வந்து அடுக்கிவிட்டார். அதுமட்டுமல்ல நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் பல எனக்கு உதவியாக இருந்திருக்கின்றன.
படத்தின் தயாரிப்பாளர் மோனிகா. நான் சிறுவயதில் வானிலை அறிக்கை பார்க்கும் காலத்திலிருந்து அவரது ரசிகன். வானிலை அறிக்கைக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டத்தை கூட்டியவர் அவர். ஆஷிகா ரங்கநாத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இங்கு பேசும் எல்லோருமே அவரது நடிப்பு பற்றி குறிப்பிட்டு பேசுகிறோம். படம் வெளியான பிறகு நிச்சயமாக ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு பேசப்படும். நான், கருணாகரன், மாறன் எல்லோரும் செட்டில் அடிக்கும் கலாட்டாக்களை கட்டுப்படுத்துவதே இயக்குநருக்கும் சித்தார்த்திற்கும் பெரிய வேலையாக இருக்கும். இந்த படம் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்று கூறினார்.
கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் பேசும்போது, ( கன்னடத்து பெண்ணான ஆஷிகா தமிழில் பேசி அசத்தி கை தட்டல் பெற்றார் ) மிஸ் யூ’ எனது இரண்டாவது படம். இதுபோல இன்னொரு படம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியாது. எல்லோரும் என்னுடைய சின்சியாரிட்டி பத்தி பேசினார்கள். அது இந்த சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே பொறுப்பை அதிகப்படுத்தியது. இது வழக்கமான ஒரு லவ் ஸ்டோரி அல்ல. பொதுவாகவே கதாநாயகிகளுக்கு லவ் ஸ்டோரி ரொம்பவே முக்கியம். காரணம் கதாநாயகர்களுக்கு இணையாக நாம் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். இந்த படத்தில் அந்த சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு நான் சரியான நியாயம் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.
முதலில் சித்தார்த்துக்காக இந்த படத்தில் நடிக்க நினைத்தேன். ஆனால் எனக்கு கதாபாத்திரமும் நன்றாக அமைந்து விட்டது. சுப்புலட்சுமி ஆக என்னை மாற்ற பயிற்சி அளித்ததற்கும் சுப்புலட்சுமி ஆக மாற்றியதற்கும் ரொம்ப நன்றி. படத்தில் என்னை இரண்டு இயக்குநர்கள் இயக்கினார்கள் என்று சொன்னால் தவறாகாது. கேமராவுக்கு பின்னால் இயக்குநர் ராஜசேகரன் என்றால், கேமராவுக்கு முன்னால் சித்தார்த்தும் எனக்கு முக பாவனை, வசனங்கள் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தனர். இயக்குநர் ராஜசேகர் ரொம்பவே பர்ஃபெக்சன் பார்ப்பார். தனக்கு தேவையானது வரும் வரை விட மாட்டார். ஒரு நடிகையாக எனக்கு அது சவாலாக இருந்தது என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, எனக்கு தொடர்ந்து சீரியஸ் கதைகள், சைக்கோ கதைகளாக வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. இயக்குநர் ராஜசேகர் கதை சொல்ல துவங்குவதற்கு முன்பே, லவ் பாடல்கள் இருந்தால் நாம மேற்கொண்டு பேசலாம் என்று சொன்னேன். ஏனென்றால் காதல் பாடல்கள் பண்ணுவதை நான் ரொம்பவே மிஸ் பண்ண ஆரம்பித்து விட்டேன். ஆனால் இயக்குநர் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது என்று சொன்னார் பின் அது எட்டு பாடல்களாக மாறிவிட்டது. சித்தார்த்தை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக ரொம்பவே பிடிக்கும். இன்னொரு பக்கம் அவருக்கு இசையறிவு அதிகம் இருக்கிறது. அவருடைய படங்களில் பாடல்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும். அதை மேட்ச் பண்ண வேண்டும் என்கிற ஒரு அழுத்தம் எனக்கும் இருக்கவே செய்தது. அவருக்காக நாங்கள் திட்டமிட்ட பாடல் வேறு. இப்போது அவர் பாடியுள்ள நீங்க பார்த்த பாடல் வேறு. இதுதான் அவருக்கு சரியாக இருந்தது. இந்த கதையை இயக்குநர் சொல்லும்போது ஒரு சீரியஸான சீன் இருக்கும். ஆனால் அதை புன்னகையுடன் சொல்வார். அவரிடம் இது சீரியஸான கட்சியா இல்ல காமெடியா என்று கூட கேட்டேன். காரணம் படத்திற்குள் ஒரு ஹியூமர் ஓடிக் கொண்டே இருக்கும். அது கதை கேட்கும்போது இருந்ததை விட, படமாக பார்க்கும் போது நன்றாக புரிந்தது என்று கூறினார்.
தயாரிப்பாளர் சாமுவேல் மாத்யூ பேசும்போது, 2011ல் நாளைய இயக்குனர்கள் சீசன் 1ல் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, அஜய் ஞானமுத்து, பாலாஜி மோகன், ஐந்தாவதாக சாமுவேல் மேத்யூ. அது நான். மற்ற எல்லோருமே படம் பண்ணி விட்டார்கள். அதிலும் சித்தார்த்தை வைத்து படம் பண்ணினார்கள். 13 வருடம் கழித்து நான் அந்த சைக்கிளை பூர்த்தி செய்கிறேன். சித்தார்த்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக அவர் பெண்களை மதிக்கும் விதத்தை பார்த்து நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகியை அடிக்க வேண்டும். ஆனால் சித்தார்த் மறுத்துவிட்டார் என தகவல் வந்தது. எனக்கு கூட சித்தார்த் மேல் கொஞ்சம் கோபம் இருந்த்தது. ஆனால் படம் பார்த்தபோது அடிக்காமல் அந்த காட்சியில் அவர் அவ்வளவு பெர்ஃபெக்டாக நடித்திருப்பார். அவர் அடித்திருந்தால் கூட இவ்வளவு நன்றாக வந்திருக்காது. படம் நீங்கள் பார்த்தால் உணர்வீர்கள்.
இந்த படம் சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் கொஞ்சம் அதிகமாகத்தான் போய்விட்டது. ஆனால் இயக்குநர் ராஜசேகர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிறார். பட்ஜெட் அதிகமாகும் போதெல்லாம் என்னை அழைத்து ஒரு பகுதி படத்தை போட்டு காட்டுவார். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் தேவை என்பார். படமும் அவ்வளவு நன்றாக வந்திருப்பதால் நானும் சரி என்று சொல்லிவிடுவேன். இந்த படத்தின் மேக்கிங் சமயத்தில் படத்தை பலமுறை பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தன்னம்பிக்கையின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. நாம் நிச்சயமாக ஏதோ ஒரு நல்லதை தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. இந்த படத்தை பார்த்ததும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இதை உடனடியாக வெளியிட முன் வந்ததும் எங்களுக்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அதேபோலத்தான் சர்வதேச பார்ட்னராக ஐங்கரனும், ஒடிடி பாட்னராக அமேசானும் இணைந்ததில் இன்னும் அதிக மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் N.ராஜசேகர் பேசும்போது, இதற்கு முன்னாடி நான் இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் இதுதான் எனக்கு முதல் மேடை. என் நண்பன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் தான் இந்த கதைக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அதிலிருந்து தான் இந்த கதை உருவானது. இதை என் குடும்பத்தாரிடம் சொன்னபோது இந்த கதையைத்தான் நீ அடுத்து படமாக இயக்க வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார்கள். எல்லா காதலுக்கும் நட்பும் குடும்பமும் உதவி செய்வார்களா எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காதல் கதைக்கு இரு தரப்பிலும் எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள். இந்த கதையை தயாரிப்பது சாம், மோனிகா இருவரிடம் சொன்னபோது மோனிகா கதை ஓகே சொல்ல, உடனடியாக பட்ஜெட் எல்லாம் கணக்கு போட ஆரம்பித்து விட்டார், சாம். அப்போதே அவர் இந்த படத்திற்குள் வந்து விட்டார் என புரிந்தது. நான் இதற்கு முன் ஆர்பி.சவுத்ரியிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர் ஒரு விஷயத்தை எடுத்து விட்டால் அதை அழகாக முடிப்பார். அதே போலத்தான் சாமுவேல் மாத்யூவும். ஒரு விஷயத்தை செய்ய முடியும் என்றால் மட்டுமே அதை ஒப்புக் கொள்வார். அவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒத்து வராது. எங்கள் இருவருக்கும் ஒத்து வந்த விஷயம் என்றால் இந்த படத்தின் கதை தான்.
இந்தக் கதை உருவாக்குவதற்கு என் நண்பர் அசோக் ரொம்பவே உறுதுணையாக இருந்தார். எனது படங்களில் தொடர்ந்து அருமையான வசனங்களை கொடுத்து வருகிறார். வாகை சூட வா படத்தில் இருந்து நான் இசையமைப்பாளர் ஜிப்ரானின் ரசிகர். அவரது அடுத்தடுத்த படங்களை பார்த்து நாம் படம் பண்ணும் போது இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்னுடைய சாய்ஸ் ஆகத்தான் இருந்தது. ஒளிப்பதிவாளர் பி.ஜி வெங்கடேஷ் உடன் கதை உருவாக்கத்திலேயே நிறைய பேசி விட்டோம். அதனால் படப்பிடிப்பில் என் கண்களைப் பார்த்தாலே என்ன தேவை என்பதை அவர் புரிந்து கொள்வார்.
இந்த படத்தின் நாயகி ஆஷிகாவை முதன் முதலில் ஒரு பேட்டியில் தான் பார்த்தேன். அவரது படங்களை பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை ஒருவரின் இயல்பான கேரக்டரை பார்த்து தான் அவர்களை இந்த படத்திற்காக அதிக அளவில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அந்த விதமாக ஆஷிகா பேட்டியில் பேசுவது மற்றும் அவரது ரீல்ஸ் வீடியோ ஆகியவற்றை பார்த்துவிட்டு தான் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என நான் நம்பினேன். நான் எதிர்பார்த்ததை விட சூப்பராக செய்து கொடுத்திருக்கிறார்.
நடிகர் பால சரவணன். வடிவேலு, விவேக் இருவரும் சேர்ந்த கலவையாக நான் பார்ப்பேன். அவரை நீங்கள் கிராமத்துக் கதைக்கும் பயன்படுத்தலாம். சிட்டி சப்ஜெட்டுக்கும் பயன்படுத்தலாம். இரண்டுக்குமே அவர் அழகாக பொருந்துவார். குறிப்பாக விலங்கு சீரிஸில் அவரது நடிப்பு என்னை ரொம்பவே கவர்ந்தது. ‘லப்பர் பந்து’ படம் பார்த்தவர்கள் பால சரவணன் உங்கள் படத்தில் இருப்பது படத்திற்கு ரொம்பவே பிளஸ் என்று சொன்னார்கள். இந்த படத்தில் சித்தார்த்தின் ஃபிரண்டு என எதுவுமே நான் காட்சிகளை உருவாக்கவில்லை. கருணாகரனை பார்க்கும்போதே நமக்கு டக்கென ஒரு ஃப்ரெண்ட் பீல் வந்துவிடும். இந்த கதாபாத்திரத்திற்கு சித்தார்த்தும் கருணாகரனை தான் டிக் செய்தார்.
வெறும் ஆண் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டாம். ஒரு பெண் நண்பியையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது சித்தார்த் சொன்னார். அது போல் சஷ்டிகாவை இந்த படத்தில் சித்தார்த்தின் நட்பு வட்டத்தில் சேர்த்தோம். மிகச் சிறந்த நடிகை. ஆனால் அவரை கட்டுப்படுத்துவது தான் கொஞ்சம் சிரமம். இந்த படம் ஆரம்பிப்பதற்கு காரணம் சாமுவேல் மாத்யூ. ஆனால் இந்த படம் நன்றாக வந்துவிடும் என நம்பியவர் நடிகர் சித்தார்த். அவர் எப்போதுமே ஒரு பாசிட்டிவ்வான மனிதர். அவர் உள்ளே வந்த பிறகுதான் எல்லா பாசிட்டிவான விஷயங்களும் நடந்தது. அவர் சாக்லேட் பாய் மட்டுமே இல்லை. எல்லா கதாபாத்திரங்களையும் சிறப்பாக பண்ணக்கூடியவர். சுருக்கமாகச் சொன்னால் நடிப்பு என்பது நடிப்பதே தெரியாமல் பண்ண வேண்டும் என்பார்கள். அது சித்தார்த்திடம் இருக்கிறது. இவர் நல்ல நடிகர் மட்டும் இல்லை. நல்ல பாடகரும் கூட. இந்த படத்தில் ஒரு பாடல் பாடுகிறேன் என்றார். ஆனால் இரண்டு பாடல் பாட வைத்து விட்டோம். அவரு தேதி கிடைத்திருந்தால் மூன்றாவது பாடலையும் பாட வைத்திருப்போம் என்று கூறினார்.
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் […]
சினிமாகாரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார்.
‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி
என்றார் .
படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,
முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம். இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன், முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லாமும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது என்றார்.
இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது, இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன. நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை முடித்து விட்டேன். அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் என்றார்.
தயாரிப்பாளர், நடிகர் கார்த்திகேசன் பேசும்போது, நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு, ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம். அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன். நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது என்றார்.
படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது.. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாகியிருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி என்றார்.
கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது, நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது. லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது. ஏனென்றால் கதைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர். இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள், ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது, அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.
என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான், நன்றாக நடிக்கிறான், நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள் .
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி அறிமுகம் செய்தார். அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது, இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம். எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள். அதனால்தான் குறுகிய காலத்தில் நிறைய வேலை செய்ய முடிந்தது. அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது. சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி என்றார்.
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை […]
சினிமாநவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன்,
கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதுடன். படத்தின் இசைத் தகட்டை வெளியிட்டார்.
விழாவில் தயாரிப்பாளர் கிருஸ்துதாஸ் பேசியதாவது… எனக்கு சிறு வயதிலிருந்து படம் பார்க்க வேண்டும், படம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் நாம் எடுக்கும் படம் சாதாரணமாக இருந்து விடக்கூடாது, சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும் என்று நினைத்த போது, கிடைத்த கதை தான் இது. இந்த இருப்பதோராவது நூற்றாண்டிலும், காதலிக்கும் காதலர்களுக்கு இருக்கும் ஜாதிய சமூகப்பிர்ச்சனையை, எங்களின் இந்த படத்தில் அழுத்தமாக பேசியுள்ளோம். திருமாவின் கையால் இந்த இசை விழா நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அவர் வந்து வாழ்த்தியது எங்களுக்குப் பெருமை என்றார்.
இயக்குநர் பிளஸ்ஸோ ராய்ஸ்டன் பேசியதாவது… இப்படம் 6,7 ஆண்டுகள் கஷ்டபட்டு கிடைத்த வாய்ப்பு. நாம் ஒரு படம் செய்தாலும் அதில் சோஷியல் மெசேஜ் இருக்க வேண்டும் என்று தான் இப்படத்தை எடுத்தோம். நானும் என் நண்பர் கவிதினேஷ்குமாரும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக இணைந்து செயல் படுவோம் என சொல்லி வைத்திருந்தோம். அதே போல் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நாங்கள் இருவரும் பேசியபோது, உலகம் முழுக்க இருக்கும் இந்த பிரச்சனையை ஒரு வீட்டுக்குள் நடப்பதாக செய்வோம் என்று தான் இந்தக்கதையை உருவாக்கினோம். இந்த கருத்து மக்களிடம் செல்ல வேண்டும் என்பதால் திருமா வரவேண்டும் என்று, அவரைத் தொடர்பு கொண்டும் அவரும் வர சம்மதித்தார். இப்படத்தில் எல்லோருமே புதுமுகங்கள். எங்களுக்காக கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது… விரைவில் வெளியாகவிருக்கும், நெஞ்சு பொறுக்குதில்லையே, படத்தின் தலைப்பை தேர்வு செய்ததிலிருந்தே இவர்களுக்கு சமூக பொறுபுணர்வு இருப்பது என்பது புரிகிறது. மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நிலையான மனம் நிலை இல்லாதவனை குறிக்கும் இந்த வரிகள், ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்த பாடல் மானுட உளவியலை பற்றிய முக்கியமான பாடல். மகாகவி எந்த பொருளில் ஆதங்கப்பட்டானோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒரு படம் எடுத்தாலும் சோஷியல் மேசேஜ் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது.
காதல் இயல்பான பண்பு அதை ஆர்டிஃபிஷியலாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதை கலைஞர்கள் நுட்பமாக கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும். கல்யாணத்திற்கு பிறகான பிர்சசனையை ஆணவக்கொலையை மையப்படுத்தி, தங்கள் பார்வையில் படைப்பாக்கி இருக்கிறார்கள். இது கௌரவக்கொலை அல்ல, வறட்டு கௌரவக்கொலை என்று தான் நான் குறிப்பிடுவேன். தான் பெற்றெடுத்த அன்பான பிள்ளைகளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொலை தான்.
ஆணவக்கொலை, சிசுக்கொலை இந்தியாவில் தான் அதிகம். இந்த இரண்டையும் நாம் அழித்து ஒழிக்க வேண்டும். பாலின பாகுபாடு இல்லாமல், சம உரிமை தரும்போதுதான், இந்த நிலை மாற வேண்டும். ஏற்கனவே பல படங்கள் எடுத்தாலும் இன்னும் இன்னும் பல படங்கள் இந்த கருத்துக்களை பேச வேண்டும். காதலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நம் சோஷியல் அமைப்பு தான் காரணமாக இருக்கிறது. நம் விருப்பம் இல்லாமலேயே நம் மீது ஜாதி சமூக முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு சமூகம் ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை தந்து விடுகிறது. காதல் அவர்களுக்கு தரும் அழுத்தம் தான் அவர்களை ஜாதி தாண்டிய காதலை குற்றமாக பார்க்க வைக்கிறது.
இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதை சரியாக சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பை தர முடியும். உரையாடலுக்கு உற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும். இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி ரமேஷ் பாபு மற்றும் சூரியவம்சம், என்றென்றும் புன்னகை, எங்க வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்யாராஜ் இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் கிங்மேக்கர் கிறிஸ்துதாஸ் இந்த படத்தில் வில்லனாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று […]
சினிமாதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பார்க்க கூடிய கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஒர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் (Working House Productions) நிறுவனம் சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார்.
இதுவரை மக்கள் பார்க்காத புதிய தோற்றத்தில் நடிக்கும் யோகி பாபுக்கு ஜோடியாக சிம்ரன், செளமியா, பிரியா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி முருகேஸ்வர காந்தி இயக்கும் இப்படத்திற்கு கெளதம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெப்ரி இசையமைக்கிறார்.
நல்ல கதைக்களம் கொண்ட மிகப்பெரிய காமெடி திருவிழாவாக மட்டும் இன்றி, மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்ககூடிய திரைப்படமாக உருவாகும் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
படம் குறித்து தயாரிப்பாளர் அருண்குமார் கூறுகையில், நாங்கள் பல வருடங்களாக திரைத்துறையில் பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறோம். திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, தற்போது அது நிறைவேறியிருக்கிறது. யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து நாங்கள் தயாரிக்கும் முதல் படமான ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ குடும்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். இந்தப் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறோம், அதன் விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சிம்ரன் பேசுகையில், மத்தகம் இணையத் தொடர் மற்றும் சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். யோகி பாபுவுடன் கதாநாயகியாக நடிப்பது மகிழ்ச்சி. இந்த படம் கலகலப்பான படமாக இருக்கும் என்றார்.
படத்தைப் பற்றிய மேலும் பல விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருப்பதோடு, படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.
ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் […]
சினிமாஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் துஷ்யந்த் பேசியதாவது, கார்த்திக் நரேனின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. எடை குறைத்து ஸ்கூல் பையனாக நடித்திருக்கிறேன். ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பேன். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரம் இந்தப் படத்தில். அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என்றார்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுந்தர்ராஜன், இப்போது சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் மனோஜ் பேசுகையில், வித்தியாசமான படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பொருந்திப் போகும் படமாக இது இருக்கும். இயக்குநர் கார்த்திக் நரேனின் ஹைப்பர் லிங்க் அவருக்குப் பிடித்த ஜானர். அதை நன்றாக செய்திருக்கிறார். நியூ ஏஜ், செண்டிமெண்ட், ஹைப்பர் லிங்க் என வலுவான தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதர்வா புதுவிதமாக இதில் தெரிவார். சரத்குமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரஹ்மான் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷ்யந்த், அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கின்றனர். தொழில்நுட்ப குழுவும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும். 22 ஆம் தேதி படம் வெளியாகிறது என்றார்.
நடிகை அம்மு அபிராமி பேசுகையில், என் கரியரில் நான் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. வித்தியாசமான கதாபாத்திரம் எனக்கு. என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நரேன். மகிழ்ச்சியான படமாக எனக்கு. தியேட்டரில் கண்டிப்பாக பாருங்கள். வித்தியாசமான படமாக இருக்கும் என்றார்.
இயக்குநர் கார்த்திக் நரேன் பேசுகையில், பல காரணங்களுக்காக ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன். 22 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்றார்.
நடிகர் ரஹ்மான் பேசுகையில், இந்த வருடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என்னுடைய ஐந்து படங்கள் வெளியாகி இருக்கிறது. ‘நிறங்கள் மூன்று’ என்ற வித்தியாசமான கதையில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு பிறகு எனது கரியர் முற்றிலும் மாறியது. இப்போது ‘நிறங்கள் மூன்று’ படத்திலும் அதே நம்பிக்கை உள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நடிகர் அதர்வா பேசுகையில், கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா மற்றும் மனோஜுக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது. 22 ஆம் தேதி இந்தப் படத்தை திறந்த மனதுடன் வந்து திரையரங்குகளில் பாருங்கள் என்றார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”. கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி கூடத்தில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். அங்கிருந்து அந்த சிறுவன் […]
விமர்சனம்ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”.
கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி கூடத்தில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். அங்கிருந்து அந்த சிறுவன் தப்பித்து கோவா சென்றடைகிறான்.கோவாவில் பிரான்சிஸ் ( சூர்யா ) அவரது உதவியாளர் யோகி பாபு, திஷா பதானி, அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லி ஆகிய நான்கு பேரும் இரண்டு குழுக்களாக காவல் ஆணையருக்கு ( கே எஸ் ரவிக்குமார் ) காவல்துறையால் பிடிக்க முடியாத ரவுடிகளை பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இருவருக்கும் காதல், மோதல் என காட்சிகள் நகர்கிறது.
ஒரு ரவுடியை பிடிக்கும் போது அவனை பிரான்சிஸ் சுட நேரிடுகிறது. அதை அந்த சிறுவன் பார்க்க, சாட்சி இருக்கிறதே என பிரான்சிஸ் அவனை தூக்க வரும்போது, ஆராய்ச்சி குழுவினர் அவனை தூங்குகிறார்கள், சிறுவன் மீது அதீதமான பாசத்தை காட்டும் பிரான்சிஸ், ஏதோ முன்ஜென்ம உறவு இருப்பதாக உணர்கிறான்.
அப்போது 1070 ஆம் ஆண்டு ரோமானிய மன்னன், ஒரு தீவில் இருக்கும் ஐந்து மலைக்கிராமங்களை அடைய நினைத்து வீரர்களுடன் கடலில் பயணிக்கிறான். அப்போது பெருமாச்சி கிராம மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள். அவர்களை போரிட்டு வெற்றி பெறமுடியாது, சூழ்ச்சியால் வெல்லலாம் என அரத்தி கிராமத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் கூறி, கொடுவா என்பவனை ( நட்டி நட்ராஜ் ) அறிமுகப்படுத்த, நட்டியும் தங்க காசுகளுக்கு ஆசைப்பட்டு பெருமாச்சி வீரர்களை பழி கொடுக்கிறார். பெருமாச்சியின் இளவரசனான கங்குவா முன்னிலையில் நட்டி தீக்கிரையாக, அவரது மனைவி தன் மகனை கங்குவா கையில் ஒப்படைத்துவிட்டு அவளும் தீக்குளிக்கிறார். மக்களின் எதிர்ப்பை மீறி, அந்தப் பையனை காப்பாற்றுவதாக கங்குவா வாக்கு கொடுக்கிறார்.
ரோமானிய மன்னன் ஐந்தீவுகளையும் கைப்பற்றினானா ? ஐந்தீவுகளின் மக்கள் என்னானார்கள் ? கங்குவா கொடுத்த வாக்கை காப்பாற்றினானா என்பது மீதிக்கதை…
படத்தில் பிரமாண்டம் இருந்தாலும், அதற்கு இணையாக கதையும் இருக்க வேண்டுமல்லவா, பாகுபலிக்கு இணையாக தமிழில், அதுவும் சூர்யா நடிப்பில் பத்து மொழிகளில், பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது எனத் தெரிந்ததும், தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், மலைப்பிரதேசங்களில் விதவிதமான ஆடை, அணிகலன்கள் முரட்டுத்தனமான மக்களின் வாழ்க்கை முறை, போர் பயிற்சி என கவனம் செலுத்திய இயக்குநர் சிவா, பார்வையாளர்களை கதாப்பாத்திரத்திரத்தோடு கனெக்ட் செய்ய தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
சூர்யா மலை பிரதேசத்தில் பாம்பு தேள் முதலை போன்ற உயிரினங்களுடன் சண்டையிடுவது, அவரது தோற்றம், உடல் மொழியால் கங்குவா கதாப்பாத்திரத்தில் பார்வையாளர்களை ஈர்த்து, மொத்த படத்தையும் சுமந்து சென்றிருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்காக சூர்யா அர்பணிப்போடு மெனக்கெட்டுள்ளார்.
படத்தில் நிறைய முன்னனி நடிகர்கள் நடித்திருந்தாலும், போஸ் வெங்கட், கருணாஸ், பாபி தியோல் போன்ற ஒரு சிலரை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசை படம் முழுவதும் வசீகரித்ததோடு, சில இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. இயக்குநர் கொஞ்சம் கதையில் கவணம் செலுத்தியிருந்தால், வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், சரித்திர படமாக மாறியிருக்கும் கங்குவா.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் […]
தமிழகம் மாவட்ட செய்திகள்திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கொடுத்துவிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக வஞ்சிப்பாளைம் பகுதியினர் நம்மிடம் கூறுகையில்.. எங்கள் பகுதியில் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்பவர்கள் விபரங்கள் அனைத்தும் வீரபாண்டி காவல்துறையினருக்கு நன்கு தெரியும். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் மாதம், வாரம் என தவணை முறையில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்கள்தான் விற்பனை செய்யச் சொன்னதாகவும் தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிறுவயதிலேயே போதைப் பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து வருகின்றனர். பல குடும்பங்களில் இளைஞர்கள் படிப்பைத் தொலைத்துவிட்டு போதை ஆசாமிகளாக அழைக்கின்றனர்.
இதுசம்பந்தமாக நாங்கள் வீரபாண்டி காவல்துறையினருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், அவர்கள் எங்களது விபரங்களுடன், மொபைல் எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள், புகார் கொடுத்தவர்களை சந்தித்து போலீஸ் அனுமதியுடன் தான் விற்பனை செய்கிறோம். அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் மாதம் தவறாமல் கொடுக்கிறோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என புகார் கொடுப்பவர்களை மிரட்டுகிறார்கள் என்கிறார்கள்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கொடுக்கும் சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் செயலுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதை என்னவென்று சொல்வது… இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மீது, திருப்பூர் மாநகர காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டாலும், வீரபாண்டி காவல்துறையினர் போல் இருந்தால்.. வேலியே பயிரை மேய்ந்த கதைபோல்தான் ஆகிவிடும் என்கிறார்கள் ஆதங்கத்துடன்..!
மேற்கு மண்டல ஐ.ஜி,திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்களா ? காத்திருப்போம்… நம்பிக்கையுடன்…!
-ஹரிதாஸ்
மாவட்ட செய்தியாளர்
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட […]
சினிமாஇந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, 21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் ‘கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். ‘கேம் சேஞ்சர்’ மட்டுமல்ல, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது என்றார்.
ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்’ என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூன் ஆதரவுக்கு நன்றி கூறி, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது என்றார்.
நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் […]
சினிமாநகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் வெளியிட்டுள்ளார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார், அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார். அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ். அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது. அவர் அவ்வளவு உழைத்துள்ளார். நகுலைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள். டி-3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.
ஒரு படம் வரவில்லை, வெற்றி பெறவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அது மிகவும் முக்கியம். ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும். முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது. படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநாயகனுக்குரிய நடிகர். ஆனால் அவரிடம் இருந்து அந்த கதாநாயகத்தனத்தை இன்னும் சரியாக வெளியே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இந்தப் படத்தில் சொன்னபடியெல்லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில் கேட்ட கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆனால் செலவு ஏழரைக் கோடியை தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.
நடிகர் நகுல் பேசும் போது.. இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று இங்கே கூறினார்கள். ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன். இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை. நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை, இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை, ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. ஏற்கெனவே கமல், சூர்யா என்று எல்லாம் ஒரு அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன், அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த வரிசையில் இளம் பாரியும் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை, விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளிவாக இருந்தார். படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதில் அவர் சமரசம் இல்லாமல் இருந்தார். அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது. இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.
என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். நான் ஒரு தனிமை விரும்பி, யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். ஆனால் உடன் பேசுவரின் மனநிலை அறிந்து அதன்படி பழகுவேன். நான் முன்பே சொன்னேன் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று. அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்; லட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும். உடல் தகுதி வேண்டும்.
இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க,
யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும். அதை நடித்த போது உணர்ந்தேன். நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது. யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல, அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். 100 க்குப் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண்டி வந்து விடுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன். இன்னும் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ளன. இந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோம். வெங்கட் பிரபுவின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இருந்தோம். இதில் புதிது புதிதாக நடித்தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வந்திருக்கிறோம் சினிமா வெறியோடு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள், பணியாற்றினார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன் படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் என்று தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான
அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண், கேசவன், பிரதீப், சிவா ருத்ரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.
டி-3 படத்திற்கு பட்ட கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்த வரிடம் தேடிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வகையிலான தனது அன்புப் பரிசாக அந்தச் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார். பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.