திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கழுகரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் டாஸ்மாக் பாரும் செயல்படுகிறது. குறிப்பிட்ட பாரில் தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்து மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை […]
மாவட்ட செய்திகள்தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்ல கட்டிடத்தில் இல.முரளி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலில் […]
மாவட்ட செய்திகள்கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத […]
மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கழுகரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் டாஸ்மாக் பாரும் செயல்படுகிறது. குறிப்பிட்ட பாரில் தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்து மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை […]
மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கழுகரை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் டாஸ்மாக் பாரும் செயல்படுகிறது. குறிப்பிட்ட பாரில் தமிழக அரசு அறிவித்த நேரத்தை கடந்து மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இரவு 10 மணிக்கு மதுக்கடை மூடிய நேரத்திலிருந்து அடுத்த நாள் கடை திறப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
மடத்துக்குளம் கணியூர் செல்லும் சாலையின் முக்கிய பகுதியாக இருக்கும் இந்த இடத்தில், அதிகாலை நேரத்தில் மது வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு பாட்டில்களை சாலையோரத்தில் வீசிச்சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் செல்லும் பலரும் இதனால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கணியூர், மடத்துக்குளம் செல்லும் சாலையில் அனுமதி இல்லாமல் செயல்படும் இந்த பார், பலருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் தொலை தூரமாக செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களும் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மது பாட்டில்களை வாங்கி , மது குடித்து விட்டு வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடப்பது அதிகரித்துள்ளன. அரசு மதுக்கடையை ஒட்டி செயல்படும் பார், முறையான அனுமதி பெற்று செயல்படுகிறதா ? இல்லையா ? என்பதை மதுவிலக்கு துறை போலீசார் ஆய்வு செய்யாதது ஏன்.? அப்படியே அனுமதி பெற்று பார் நடத்தினாலும் அரசு அனுமதி வழங்கிய நேரத்தை விட கூடுதல் நேரத்திலும் மது விற்பனை செய்வதை தடுக்க தவறியது எப்படி ? சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடப்பதை கண்காணிக்காமல் மதுவிலக்கு போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனரா.?
மடத்துக்குளம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை தெரிந்தும், சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் மெளனமாக இருப்பதற்கு காரணம் என்ன.?
இதேநிலை நீடித்தால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை ஆய்வாளர் அறிந்திருக்கவில்லையா ?
சமீபமாக குடிபோதையில் தான் அதிக கொலை, கொள்ளை, குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனை தடுக்க முயற்சிக்கும் சட்ட ஒழுங்கு காவல்துறை போலீசார், முதலில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதையும், பார் நடத்தும் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் குற்ற சம்பவங்களை தடுக்க நினைப்பதும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் எந்த தீர்வும் கிடைக்காது.
எனவே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க சட்ட ஒழுங்கு, மதுவிலக்கு ஆகிய இரண்டு துறையைச் சேர்ந்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்ல கட்டிடத்தில் இல.முரளி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலில் […]
மாவட்ட செய்திகள்தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்டத்தின் செயற்குழு கூட்டம், கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்ல கட்டிடத்தில் இல.முரளி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கிணங்க பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொண்டுவரும் மாநில மையத்தினை மீண்டும் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் துணைத் தலைவர் கே ஆர் ராஜேந்திரன், மாநில தலைவர் கோ. சுசீந்திரன், மாநில செயலாளர் திருமதி சுகன்யா, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் வடிவேல், வருவாய்த்துறை சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
– ரமேஷ்
கோவை செய்தியாளர்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத […]
மாவட்ட செய்திகள்கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் வருண் என்பவர் கடந்த தனது இருசக்கர வாகனத்தை அவர் பணிபுரியும் தனியார் நிறுவனத்ற்கு வெளியே நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுதினம் வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் சில மாதங்களுக்கு முன், பணியை முடித்துவிட்டு இரவு அவரது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நாகராஜ் (26), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்பராஜ் மகன் பிரகாஷ் (25) மற்றும் பெருமாள் மகன் சசிகுமார் (26) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளிகளிடமிருந்து கருமத்தம்பட்டி பகுதியில் திருடு போன இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்ததோடு, வாகன திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
– ரமேஷ்
கோவை செய்தியாளர்
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் […]
சினிமாபிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் படக்குழுவினர் கலந்துகொள்ள, கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது, சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யாவுக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசியதாவது, முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே, இந்த கேரக்டர் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்ஷ்மன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சர்தாரில் கார்த்தியை பாடாய்படுத்தினோம், அதைத் தாண்டியும் மீண்டும் மேக்கப் போட்டு இந்தப்படத்திற்கு வந்ததற்கு நன்றி. இந்த ஃபர்ஸ்ட் லுக், சர்தாரில் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் ஜே சூர்யா கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டார். இதில் அசத்தியுள்ளார். படம் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்றார்.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசியதாவது, இறைவனுக்கு வணக்கம், சர்தார் முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள், அப்போது மித்ரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என்றார். சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன். சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதற்காக கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறோம் என்றார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, “சர்தார் 2” ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி, அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தியிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும் என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது, இது மிகப்பெரிய மேடை, 10 வருடம் முன் இந்த இடத்தில் மித்ரன் என்னிடம் சர்தார் கதையைச் சொல்லியுள்ளார். அவர் எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர் அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை திரில்லருக்கு இசையமைப்பேன், எனக்கு பிடித்த ஜானர். கார்த்தியிடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி. அவரிடம் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன். இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும். இந்தப்படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.
ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வீர தீர சூரன்”. கதைப்படி.. கோவில் திருவிழா நாளன்று […]
விமர்சனம்ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிப்பில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வீர தீர சூரன்”.
கதைப்படி.. கோவில் திருவிழா நாளன்று ஊர் பெரியவர் ரவி ( பிருத்விராஜ் ) வீட்டின் வாசலில் ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்து, எனது புருஷன் எங்கே ? நீங்கள்தான் மறைத்து வைத்துள்ளீர்கள், அவரை என்ன செய்தீர்கள் ? என வீட்டின் வாசலில் அமர்ந்து தகராறு செய்கிறார். அவரை ரவியின் மகன் கண்ணன் ( சுராஜ் வெஞ்சரமூடு ) உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கிருந்து அடித்து விரட்டி விடுகிறார்கள். அதே சமயம் அவரது கணவர் தன் மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அந்த நேரத்தில் காவல்நிலையத்திற்கு வரும் எஸ்பி அருணகிரியுடம் ( எஸ்ஜே சூர்யா ) பெரியவர் வீட்டிற்கு சென்ற எனது மனைவியை காணவில்லை, பெரியவர் தான் ஏதோ செய்திருப்பார், எனது மனைவியை சீக்கிரம் கண்டுபிடித்து தாருங்கள் கூறுகிறார்.
ஏற்கனவே பெரியவர் ரவி மற்றும் அவரது மகன் கண்ணன் மீது உள்ள முன் பகையை தீர்த்துக் கொள்ள இதுதான் சமயம் என நினைத்து, அந்த புகாரின்பேரில் கண்ணன் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக கண்ணனை என்கவுண்டர் செய்ய தனிப்படை அமைக்கிறார் எஸ்பி. இந்த தகவல் பெரியவர் ரவிக்கு தெரியவர மகனை தலைமறைவாக இருக்கச் சொல்லிவிட்டு, எஸ்பியை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.
அதற்காக தனது விசுவாசியான காளியின் உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி மனைவி, குழந்தைகளுடன் மளிகைக்கடை நடத்திக்கொண்டு சந்தோஷமாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டு செல்கிறார். ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு செல்லும் சமயத்தில், கண்ணனை என்கவுண்டர் செய்ய நேரம் குறிக்கிறார் எஸ்பி. அதே சமயம் எஸ்பியை முடிக்க காளியின் மூலம் திட்டம் தீட்டுகிறார் ரவி.
இந்நிலையில், காளியை வைத்து எஸ்பி அருணகிரி ஒரு திட்டத்தை தீட்டுகிறார். பின்னர் போலீஸ் கண்ணனை என்கவுண்டர் செய்ததா ? எஸ்பி அருணகிரி கொள்ளப்பட்டாரா ? இந்த பரமபத ஆட்டத்தில் விக்ரமின் பங்கு என்ன ? என்பது மீதிக்கதை…
படம் துவக்கம் முதல் புதுவிதமான வித்தியாசமான திரைக்கதையுடன் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர தேர்வும், அவர்களின் திறமைக்கேற்ப நடிகர்களை கையாண்ட விதமும் அருமை.
சீயான் விக்ரம், காளி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள துஷாரா விஜயன், சந்தோஷம், சோகம், பரிதவிப்பு என தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தனது பின்னணி இசையால், பார்வையாளர்களின் இதயங்களில் இடம்பிடித்திருக்கிறார்.
நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் […]
சினிமாநடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினிஈ, சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது
எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக் நிறுவனர்- தொழிலதிபர் பாஸ்கரன், ‘எம் ஆர் டி மியூசிக்’ முருகன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர், தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்.. எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அந்த சந்திப்பின்போது, ‘நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?’ என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன். ‘தண்ணீர் தண்ணீர்’ எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய ‘கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..’ என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன்.
‘சிங்கார வேலனே’ என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன். அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்… நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர்.
அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது.
அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன். அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும். மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை. நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் ‘ஆக்சன்’ என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன்.
இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் – நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது. ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான்.
காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.
கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது. முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு ‘வேட்டையாடு விளையாடு ‘ படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார். எப்போதும் அவன் இஷ்டப்படி தான் இருப்பான். கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, ‘நான் இருக்க மாட்டேனே ! என்று சொன்னான். நான் இன்னும் இருக்கும்போது.. அவன் இல்லையே ! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது என்றார்.
கல்வியாளர் – ஆராய்ச்சியாளர் – தொழிலதிபர் பாஸ்கரன் பேசுகையில், கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு திரைப்படங்களை பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரைப்படங்களை பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தான். ஏனென்றால் அங்கு பள்ளி படிப்பில் தமிழ் கிடையாது.
அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்கள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் இன்று தமிழ் பேசுகிறார்கள் என்றால் அது திரைப்படங்களை பார்த்து தான். புத்தகத்தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவில் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமிழ் பேசுவார்கள்.
நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் திரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட்ரவர்ஸியல் பேசினாலும்.. மற்றொரு பக்கம் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் ஒரு ஆலயத்தில் ஒரு சின்ன பெண் முருகனின் பாடலை அற்புதமாக பாடினார். அந்தப் பெண் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை பெண். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் தமிழில் அற்புதமாக பாடுகிறார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். மொழி மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை பார்க்க வேண்டும். புத்தகத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.
இந்த தருணத்தில் சினிமாக்காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைவரது ஆசீர்வாதமும், ஆதரவும் இந்தத் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை.
சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி. அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள், குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன. அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில் ‘இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் […]
சினிமாதிரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள், குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன. அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில் ‘இத்திக்கர கொம்பன்’ என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது.
இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது. அந்த யானைக்கு கதையில் உள்ள இடமும், காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில், ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு, சுமேஷ், ஸ்ரீஜா போன்ற கலைஞர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அவர் தூத்துக்குடி செல்வம் என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டும் தோற்றத்தில் நடித்திருக்கிறார். அசர வைக்கும் நடிப்பிலும் மிரள வைக்கும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார்.
படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. இவர் பிரபல இயக்குநர் கிருஷ்ணசுவாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு பினீஷ் பாலகிருஷ்ணன் – சீனு வயநாடு ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள்.
வீ.கே. பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை தோன்றும் காட்சிகளை அற்புதமாகப் படம் பிடித்துள்ளார். சாபு இரன்மல கலை இயக்கத்தையும், ஜான்சன் தாமஸ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை ஆக்சன் அஷ்ரப் குருக்கள் அமைத்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பிற்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விறுவிறுப்பான கதையுடன், குழந்தைகளைக் கவரும்படியான, குடும்பத்தினருடன் பார்க்கும்படியான ஒரு திரைப்படமாக இந்த ‘இத்திக்கர கொம்பன்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாகி வருகிறது.
ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, […]
சினிமாஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
நடிகை ஆராத்யா தேவி பேசுகையில், நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு என்றார்.
நடிகர் சத்யா யாது பேசுகையில், நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். ‘சாரி’ படம்தான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம் என்றார்.
தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா பேசுகையில், ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.
கேரள விநியோகஸ்தர் ஷானு பேசுகையில், உலகம் முழுவதும் இந்தப் படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத் அவர்களை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 செண்ட்ருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள் என்றார்.
தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத் பேசுகையில், இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை என்றார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசுகையில், ஒவ்வொரு படத்திற்கு ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது என்றார்.
ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் பிருத்விராஜ் இந்திரஜித் சுகுமாரன் அபிமன்யு சிங் சுராஜ் வெஞ்சரமூடு ஜெரோம் பிளின் எரிக் எபோனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எம்புரான்”. […]
விமர்சனம்ஆசீர்வாத் சினிமாஸ், ஶ்ரீ கோகுலம் மூவீஸ், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், மோகன்லால் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் பிருத்விராஜ் இந்திரஜித் சுகுமாரன் அபிமன்யு சிங் சுராஜ் வெஞ்சரமூடு ஜெரோம் பிளின் எரிக் எபோனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எம்புரான்”.
கதைப்படி.. குஜராத்தில் நடைபெற்ற இன கலவரத்தில் ஒரு அரண்மனையில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு அந்த அரண்மனையை அபிமன்யு சிங் தலைமையிலான கும்பல் அபகரித்துக் கொள்கின்றனர். அதில் பிருத்விராஜ் மட்டும் அவரது தந்தையின் உதவியுடன் தப்பிக்கிறார்.
இந்நிலையில் கேராளாவில் ஐ. யூ.எப் கட்சியின் தலைவராகி முதல்வராக பொறுப்பேற்ற டொவினோ தாமஸ் பணம் மற்றும் தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு ஜ.யூ.எப் கட்சியிலிருந்து விலகி அபிமன்யு சிங்குடன் இணைந்து புதிய கட்சியில் ஐக்கியமாகிறார். கேரளாவின் முக்கியமான அணை சம்பந்தமாக மக்களுக்கு விரோதமான முடிவையும் எடுக்கிறார். பின்னர் தனது தங்கை மஞ்சு வாரியரையும் ஐ.யூ.எப் கட்சியின் மூலம் அரசியலுக்கு வரக்கூடாது என தடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருக்கும் மோகன்லாலுக்கு, கேரள அரசியல் நிலவரங்கள் குறித்து இந்திரஜித் சுகுமாரன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு மோகன்லாலும் கேரளாவுக்கு வருகிறார்.
பின்னர் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் டொவினோ தாமஸின் முதல்வர் பதவி மற்றும் மஞ்சு வாரியரின் அரசியல் எதிர்காலம் என்னானது ? சிறுவயதில் தனது குடும்பத்தை அழித்த அபிமன்யு சிங்கை பழிவாங்க துடிக்கும் பிருத்விராஜின் எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை...
படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து, இறுதிவரை காட்சி வடிவமைப்புகள் அனைத்தும் புதுமையாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குநர். அதாவது சண்டை காட்சிகள் அனைத்தும் புதுமையாகவும், பிரமாண்டமாகவும் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மோகன்லால் புதுவிதமான முகபாவணையிடன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யு சிங் உள்ளிட்ட ஒவ்வொரு கதாப்பாத்திர தேர்வும் சிறப்பு.
மொத்தத்தில் பிரமாண்டமாக புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது எம்புரான்.
எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பேசுகையில், தமிழ் சினிமாவில் […]
சினிமாஎஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் வைஸ் பிரெசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பேசுகையில், தமிழ் சினிமாவில் திறமையான கதைகள் பல வெளியாகி இருக்கிறது. இதில் ‘டெஸ்ட்’ திரைப்படமும் ஒன்று. இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா கதை குடும்பம், முக்கிய கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசும். இயக்குநர் சஷிகாந்த் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என திறமையான நடிகர்கள் அனைவரும் முதல் முறையாக இந்த படத்திற்காக ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். இந்த வருடம் எங்களுடைய முதல் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் ‘டெஸ்ட்’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.
நடிகர் மாதவன் பேசுகையில், ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பேன், அப்படி இருக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது, என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன் என்றார்.
நடிகர் சித்தார்த் பேசுகையில், நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பலரும் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டர் ரோல் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதட்டம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பிடிக்கும். அவருக்கு என் கதாபாத்திரத்தை டெடிகேட் செய்ய விரும்புகிறேன் என்றார்.
நடிகை மீரா ஜாஸ்மின் பேசுகையில், டெஸ்ட்’ படம் நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்து பணிபுரிந்திருப்பதில் மகிழ்ச்சி. அழகான படம் இது. கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டும். மேடியும் நானும் திரையில் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்று. ‘ரன்’, ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறோம். YNOT ஸ்டியோஸ் படத்தை தயாரித்திருக்கிறது. இயக்குநர் சஷி, நயன்தாராவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் சஷிகாந்த் பேசுகையில், நான் சினிமாவுக்கு வந்ததே படம் இயக்கதான். ஆனால், இயக்கம் தெரியாததால் அதை கற்றுக் கொள்ளவே YNOT ஸ்டியோஸ் தொடங்கினேன். இந்த ‘டெஸ்ட்’ படத்தின் கதாபாத்திரங்களை புரிந்து கொள்ள மெச்சூர்டான நடிகர்கள் தேவைப்பட்டார்கள். எனக்குமே பல டெஸ்ட் இந்தப் படத்திற்காகத் தேவைப்பட்டது. அதனால்தான், படம் வெளியாக இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்றார்.